பக்கம்:பூநாகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தோழி செய்த புரட்சி

யில், ஒருக்களித்தவாறு படுத்திருந்த மருதி, மயிற்பீலியால் முகத்தை தடவிக் கொண்டிருந்தாள். பாதங்களில் கிண்கிணி மணியொலிக்கும் பரிபுரம் என்னும் பொன்னாபரணம், அவள் அ. குமிங்கும் புரண்டு படுத்ததால், தாளத்திற்குக் கட்டுப் படாதது போன்ற ஒலியைக் கிளப்பியது. இதே போல் மார்பை மறைத்திருத்த கச்சையின் பின்புறம், முதுகிற்கு மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்த சார்வாரம்’ என்னும் கச்சின் கடைக் கயிறு அவிழ்ந்து போயிருந்தது. கச்சையை மறைத்த வெண் துகில் துவண்டு போய் கிடந்தது. துகிலுக் கும், கச்சைக்கும் இடையே கழுத்தில் இருந்து தெருங்கிக் கொண்டிருந்த ஆரமும், தொங்கலும், தோளணியான அங்கதமும், காதணியான வல்லிகையும், அவற்றில் படிந்தி ருந்த வைரக் கற்களில் எண்ணெய் இறக்கியிருந்ததால், ஒளி குன்றி விளங்கின. அவள் நெற்றியில் இடப்பட்டிருந்த கலவைச் சாந்தில் பாதி கலைந்து தலை முடியையும் தடவிக் கொண்டிருப்பது போல் காட்டியது.

மருதி இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. வெறி பிடித்தவள் போல் கட்டிலில் இருந்து எழுந் தாள். அறையில் இருந்து, அவள் வெளியே வந்தா , மாட முனைப்பின் தடுப்புச் சுவரில், தலையைக் குவித்துக் கொண்டு, சாய்ந்தவாறு கீழே வழிமேல் விழி விட்டாள்.

அங்கே

கழுதைகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு உவனர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நொய்ச்சிப் டெண்டுகள், தலையில் சுமந்து வந்த உப்பை, நெல்லுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள், சிறு சிறார்கள், சிறு தேர்களை உருட்டிக் கொண்டிருந்தார்கள. சில செவிலித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/153&oldid=600611" இலிருந்து மீள்விக்கப்பட்டது