பக்கம்:பூநாகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தோழி செய்த புரட்சி

வேலென்று சொன்னவனே, அந்த வேலை, கூர்மையற்ற தாகும்படி செய்துவிட்டான்.

பின்னாளில் தோன்றிய கலிங்கத்துப் பரணியில் சொல் வதுபோல், வருவான் என்று மாடச் சுவருக்கு அருகிலும், பிறகு வரமாட்டான்' என்று ஒதுக்குப் புறமாக இருந்த அறைக்குள்ளும் போய் வந்து கொண்டிருந்த மருதி, முடிவில் மாடச் சுவரில் போட்டிருந்த இருபது கோடுகளுடன் இன் னொரு கோட்டையும் போட்டுவிட்டு, துயரம் சோர்வாக, அறைக்குள் போய்க் கட்டிலில் விழுந்தாள்.

அவளுக்கு நினைக்க நினைக்க அச்சமாக இருந்தது. அவள் அன்னை, அவளுக்குத் திருமணம் செய்விக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறாள். குளிர்ந்த பந்தலின் கீழ், வெண் மணல் பரப்பில், மனைவிளக்கு ஒளிர, நற்பொழுதில், மங்கல மகளிர் நால்வர் அவளுக்கும் குட நீராட்டி, குலவை யிட்டு, வாழ்த்துக் கூறி, துந்து பி சங்குகள் முழங்க, காளை யின் கரத்தைப் பற்றுவதில் அவளுக்கும் ஆசைதான். ஆனால் அந்தக் காளை, சேந்தனாகத்தான் இருக்க வேண்டும்.

அவனுடன் களவொழுக்கம் கொண்டதை, இன்னும் மருதி, தன் அன்னையிடம் சொல்லவில்லை. அவள், இவ ளுக்குச் சூட்டுக் கோலால் சூடு போட்டாலும் போடுவாள் என்று அஞ்சினாள் . அதற்குக் காரணமும் உண்டு, அவள் தந்தை பூப் பெய்திய மகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரத்தை ஒருத்தியின் வீட்டில் சரணடைந்திருக்கிறான். இதனால் முதலில் அழுது, சுற்றத்தின் ஏச்சிற்கு அஞ்சி, அவன் தானாக வருவான் என்று நினைத்து, மணமுடிப்பில் மும்முரமாக இருக்கிறாள். மகளுக்கு ஒரு மகவு பிறந்து விட் டால், அவனும் சொந்த பந்த மரியாதை நிமித்தம் பரத்தை பால் செல்வதை விட்டு விடுவான் என்று நினைக்கிறாள். ஆக, அன்னைக்கு மகளின் மணமுடிப்பு, அவளுக்கு மட்டும் மணாளனைக் கொடுப்பது மட்டுமல்ல, தனக்கும் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/155&oldid=600613" இலிருந்து மீள்விக்கப்பட்டது