பக்கம்:பூநாகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமூத்திரம் 147

வனைத் திரும்பவழைக்கும் வியூகம் என்பது மருதிக்குச் செவ் வனே தெரிந்தது. இந்த நிலையில் பெற்ற தாயிடம் சொல்ல லாம் என்றால், அவள் சரியான செவிடு. தோழி பாவையோ செருக்கானவள்.

ஆனால் யாரிடமாவது நடந்ததைச் சொல்லவில்லையா னால், நடக்கப் போவது பயங்கரமாக இருக்கும் என நினைத் துத் தோழியை வரவழைத்து, அவளை சேந்தனிடம் தூது விடுவது என்று தீர்மானித் தாள். தோழி வீட்டின் அடுக் களைக்குப் போய்த் தன் அன்னையிடம் உரக்கப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகக் கேட்டது.

'அம்மா! பாவையிடம் பால் கொடுத்து விடு’’ என்று மாடத்தின் பின் புறச் சுவரில் சாய்ந்து கொண்டு கத்தினாள். அங்கேயிருந்து, அடுக்களை விவரங்களின் அணுக்களைக் கூடக் காணலாம்!

மருதி எதிர்பார்த்த நேரத்திற்குள் பாவை வரவில்லை, நிதானமாக, ஒரு கையில் பால் கொண்ட பொற் கிண்ணத் ணத்துடனும், மறு கையில் ஒலைச் சுவடியுடனும் வந்தாள். கிண்ணத்தை மருதியிட ம் நீட்டிவிட்டி, கட்டில் தூணிற்கு அருகில் போடப்பட்டிருந்த ஒலைத் தட்டியில் அமர்ந்து கொண்டாள். கட்டில் தூணில் சாய்ந்துகொண்டே ஓலைச் சுவடியைப் புரட்டினாள்.

பேரவை! பால் பருகுகிறாயா?’’ வேணடாம். ’

கையில் என்னது ஒலைச் சுவடியா ’’ போர்ததாலே அதாயுமே?” 'ஒலைச் சுவடியென்று தெரியும். ஆனால் ’’ * சொல்லு.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/156&oldid=600614" இலிருந்து மீள்விக்கப்பட்டது