பக்கம்:பூநாகம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தோழி செய்த புரட்சி

'காதல் சுவடியா? காதலன் ஒலையில் கடிதம் வரைந் திருக்கிறானா?’’

மருதி, தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள். கடைசியில், காதல் பேச்சைத் துவக்கியாகி விட்டது. சேந்த னைத் தொட்டு விடலாம்!

ஆனால் பாவை கொடுத்த பதில், சேந்தனை வெகு தூரத்திற்குத் தள்ளிக் கொணடிருந்தது.

'இது காதற் சுவடியல்ல அம்மா! சோழ மன்னன் பேரவைக்கோ பெருநற்கிள்ளி, முக்காவனாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்றதைப் போற்றியும் விளக்கியும் சரத் தந்தையார் எழுதிய பாடல்.’’

மருதிக்கு வெறுப்பேற்பட்டது. எனினும் காரியத்தைக் கருதி, மேலும் மிகுதியாகப் புன்னகைத்தாள்.

‘ஆமாம். இது எப்படி உனக்குக் கிடைத்தது? புலவர் என்ன கூறுகிறார்?’’

என் இல்லில் இருக்கும் பல சுவடிகளில் இதுவும் ஒன்று. மல்லனின் மார்பு மீது கிள்ளி ஒரு காலை ஊன்றியதையும் அப்போது மல்லன் அவன் பிடியிலிருந்து மீள முயற்சித்த போது, மன்னன் இன்னொரு காலால் அவன் முதுகை வளைத்துக் கொண்டதையும், பின்னர் அவன் கால்களை யும், தலையையும் முறித்ததையும் இந்தப் பாடல் விளக்கு கிறது.’’

மருதிக்கும் இலக்கியத்திற்கும் வெகு தூரம். இருப்பினும், பாவையை மகிழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் பதிலளித்தாள் .

படி, பார்க்கலாம்!” பாவை. படித்தாள் மருதி தான் வியந்து போயிருப்பதாகப் பாவனை செய்து கொண்டே, 'கவி நயமும், சொல் நயமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/157&oldid=600615" இலிருந்து மீள்விக்கப்பட்டது