பக்கம்:பூநாகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 149

ஓசை நயமும் கொண்ட அற்புத வரிகள். சரத்தாதை புகழ் மிக்க புலவர்?’ என்றாள்.

'சரத்தாதை இல்லை. சரத்தந்தையார். நம் புலவர் களுக்கு, காதலையும், போரையும் தவிர வேறு விவரங்களே தெரியாது போலும்.’’

'பாவை! பெரியோரைப் பழித்தல் தவறு.??

'இப்படிச் சொல்லியே, சுயமாய் சிந்திக்கும் திறனை இழந்து விட்டோம். மன்னரைப் பாடுவதும் காதலை மேன்மைப்படுத்துவதும் தேவைதான். ஆனால் அதற்கும் ஓர் அளவு வேண்டாமா? நம் போர்களில் புற முதுகிடுபவன் யார்? ஒன்றில் பாண்டியனாக இருப்பான். இன்னொன்றில் சோழனாக இருப்பான். வீரர்களும் நம்மவர்தான்; கோழை களும் நம்மவர்தான். இவற்றைப் புகழ்வதிலோ, இகழ் வதிலோ என்ன இருக்கிறது? களவொழுக்கத்தைப் பற்றிய பாடல்கள் இலக்கியச் சுவையில் ஈடற்றவைதான்; ஆனால் இவற்றைப் படித்து எத்தனை பெண்கள் கெட்டுப் போயிருக் கிறார்கள்? இலக்கிய இயல்படியும், மரபியல்படியும், களவொ ழுக்கத்தை வியந்து பாடலாம். ஆனால் உலகியலில் முடியுமா? பாடல்களில் வருகிறதென்று எவனையாவது காதலித்து, கடைசியில் பத்து மாத்துடன் பாவியாவது நாம் தான்; புலவர்களா?”

'பாவை! காதல் புனிதமானது. உனக்குத் தெரியாது. அது கடலைவிடப் பெரியது. வானைவிட உயர்ந்தது.”

'இதுவும் ஒரு புலவர் பாட்டில் வருவதுதான். எவனோ சொன்னதைக் கேட்டு நீ ஒப்புவிக்கிறாய். அவ்வளவு தான்.”

'நீ என் அறிவைப் புண்படுத்துகிறாய்.”

'புண்படுத்தவில்லை அம்மா. புரிந்ததைச் சொல் கிறேன். என் சுற்றுப்புறத்தை நான் சிந்திக்கத் துவங்கியதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/158&oldid=600616" இலிருந்து மீள்விக்கப்பட்டது