பக்கம்:பூநாகம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தோழி செய்த புரட்சி

எனக்கே வியக்குமளவிற்குப் பல புதிய புதிய உண்மை புலப் படுகின்றன. எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பவன் அறிஞன்; அவன் விவரங்கள் கொண்ட யந்திரப் பொறி . இவனால் யாரும் உருப்படப் போதில்லை. ஆனால் சிந்தனை யாளன், ஒரு தனிச் செம்மல் கருவிலே அறிவுடையார் என்று யாருமில்லை. அடி நிலை மனிதனுக்கும், மேம்பட்ட மனித னுக்கும் உள்ள வேறுபாடு, அவர்கள் தம் சிந்தனைத் திறனை எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது; அறிவில் அல்ல.’’

மருதி உண்மையிலேயே குழம்பிப் போனாள். அவள் களவொழுக்கத்தைப் பற்றிச் சொன்னபோது குறுக்கிட்டு, சேந்தனைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தாள். ஆனால், பாவை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், களவொழுக்கத்தையே விட்டு விட்டாள். இதனால் ஆதங்கப் பட்ட மருதி, உனக்கு வாய் அதிகம்’’ என்றாள்.

'வாய் அதிகம் இல்லை அம்மா, சிந்தனை அதிகம். நம் புலவர்களின் பாடல்கள், தனிப்பட்ட அகந்தையைத் தீர்க்கத் துடிக்கும் இயல் வேந்தர்களுக்கு வெறியூட்டுகின்றன. ஒரு புலவன் ஒரு மன்னனைப் புலியென, இன்னொரு புலவன் பிறிதொரு மன்னனைச் சிங்கமென, இரு மன்னர்களும் தாங்கள் புலவர்கள் கூற்றுப்படி விலங்குகள்தான் என்று மெய்ப்பிப்பது போல் போரில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஏதுமறியா மக்கள் உயிரிழக்கிறார்கள். பிறகும் நம் புலவர் கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.”

'நம் புலவர்கள் வேறு பொருட்களைப் பாட வில்லையா?*

போடியிருக்கிறார்கள். கல்வியைப் பற்றியும், ஆட்சி முறை பற்றியும், பலர் குறிப்பாக பிசிராந்தையார் போன் றோர் பாடியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் காதலை யும், போரையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/159&oldid=600617" இலிருந்து மீள்விக்கப்பட்டது