பக்கம்:பூநாகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 7

ஆகக்கூடியது எதுவும் இல்லை என்பதுபோல், அந்தக் காகம் கண்ணை மூடிக்கொண்டு சுவரோடு சுவராகச் சாய்ந் தது. அப்போது உறுமல் சத்தம். அந்தப் பூனை அடிமேல் அடியெடுத்து அதை நோக்கிவந்தது. அதைப் பார்த்துவிட்ட காகம்,அந்த சொறி நாயையே ஒரு கடவுளாக அனுமானித்து, அது வரவேண்டும் என்று பிரார்த்திப்பது போல் தலையைத் தூக்கியது. அதற்குள் அந்தப் பூனை பாய்வதுபோலிருந்தது. அதன் சீற்றச் சத்தம் அதன் காதில் காற்றில் மோதியது. இறக்கையின் பின்னலகில் ஏதோ ஒன்று உரசுவது போலிருந் தது. ஏற்கெனவே வலித்த புண்ணில் வேல் பாய்வது போலிருந்தது. அவ்வளவுதான்.

அந்தக் காகத்திற்கு எப்படி அந்த வேகம் வந்ததோ, தரைபட்ட இறக்கையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அரற்றியபடியே ஓடியது. ஒரு துண் மறைவில் போய் நின் றது. சிறிது நேரம். சிறிதே சிறிது. அந்தப் பக்கமாகப் பூனையின் கண்கள் கலர் பல்ப் போல் மீண்டும் தோன்றவே அங்கிருந்து ஓடி, ஒரு செங்கல் அடுக்கிற்குள் நுழையப் போனது. அதற்குள் அந்தப் பூனை இன்னொரு பக்கமாய் வந்து தலையில் நகம் போடப் போவதுபோல் இருந்தது. உடனே, அந்த நகக் காலுக்குக் கீழே தலையை லாகவமாகக் குவித்து, பூனையின் வாலுக்குப் பின்னால் ஒடி ஒரு வைக் கோல் குவியலுக்குள் போய் தன்னை மறைத்துக்கொண்டு மூச்சுவிட்டது. அருகேயே அந்தக் குவியலின் ஒரு பகுதி அங்குமிங்குமாய் அசைவதைப் பார்த்த அந்தக் காகம், அங்கிருந்து பீறிட்டு, தத்தித் தத்திக் குதித்துக் குதித்து ஓடி யது. உயிர் வலி, உடம்பு வலியைத் துரத்த, அது ஒடி ஒடி ஒரு மின்சாரக் கம்பத்தின் அருகே களைப்புத் தாங்க முடி யாமல் லேசாய் தலையைச் சாய்த்தது. அதற்கு முன்னா லேயே அதை எதிர்பார்த்து அங்கு வந்தது போல் அந்தப் பூனை, இப்போது கோபாவேசமாகப் பார்த்தது. இதுதான் அதை வம்புச் சண்டைக்கு இழுத்ததுபோல், உறுடில் சத் தத்தை இரட்டிப்பாக்கி, புலி பதுங்குவதுபோல் பதுங்கி ஒரே

டாய்ச்சலாய் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/16&oldid=600472" இலிருந்து மீள்விக்கப்பட்டது