பக்கம்:பூநாகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு , சமுத்திரம் 151

இது அவர்கள் தவறு அன்று. நம் புலவர், அறிஞர்கள் சிந்தனையை அறிவுக்கு உட்படுத்தியதால் விபரீதக்கற்பனை களும், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பாடல் களும், ஓர் அனிச்சைச் செயலாக ஆகிவிட்டன. ஆனால் பிசிராந்தையார் போன்று, அறிவை சிந்தனைக்குப் பயன் படுத்தியவர் மிகச் சிலர். தலைவன் அழகனாய், வீரனாய் இருக்க வேண்டும் என்றும், தலைவி பேரெழில் கொண்ட வளாய் இருக்க வேண்டுமென்றும் இலக்கியங்களுக்கு வரம் பிட்டுக் கொண்டார்கள். ஊமையைத் தலைவியாக்கிய புலவன் உண்டா? நொண்டியின ஏக்கத்தைத் தெரிவிக்கும் பாவலன் உண்டா?’’

'பாவை. பிஞ்சில் பழுப்பது நன்றன்று!’’

'பிஞ்சாய் இருப்பதும் நன்றன்று. மக்கட் தொகுதி என்பது, நிலைத்த ஒன்று. மனிதர் வருவர், போவர். ஆனால் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று. அது குட்டையில் தேங்கிய நீரல்ல. மாறாக அது ஊழிக்கடலையும் ஊடுருவி ஒடிக் கொண்டிருக்கும் ஆறு. ஆறு வற்றினாலும், கூடினாலும் அது தேங்கக் கூடாது. அது ஒடிக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கியங்கள், இந்த ஆறுக்கு அணை போடுவது போல், மன்னர்களை தகுதிக்கு மீறிப் புகழ்வதும், காதலை இயல்புக்கு மீறி விளக்குவதுமாக உள்ளன. ’’

'இலக்கியச் சுவையை மட்டும் ரசித்தால் போதாதா?’’

'இனிப்பு சுவைக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி உண் டால், குடலில்தான் நம்மை அறியாமல் பூச்சிகள் உண்டா கும். இன்று புலவர்கள்,போர்களையும்,காதலையும்.அளவுக்கு மீறிப் பாடிவிட்டார்கள். ஈராயிர ஆண்டுகளுக்குப் பின்னர் நம் சந்ததியினர் இந்த இரண்டையும் மட்டும பிடித்துக் கொண்டு பழைமை மீட்பு வாதத்தில் இறங்கலாம்! இதனால் இதர மக்கட் தொகுதிகள் வரும்போது, நம்மவர்கள் மனத்தாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/160&oldid=600618" இலிருந்து மீள்விக்கப்பட்டது