பக்கம்:பூநாகம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選53 தோழி செய்த புரட்சி

செயலாலும் பின் தங்கிப் போவார்களோ என்று அஞ்சு கிறேன். இக்காலத்தில் தமிழர்களாகிய நாம், சீனரை விட, யவனரைவிடச் சிலவற்றில் மேலோங்கியும், சிலவற்றில் இணையாகவும் திகழ்கிறோம். எனினும், இன்றை நாளில் தோன்றும் அரச வழிபாடும், போர் நிலைப் பாடல்களும், பின்னால் தோன்றும் இலக்கியங்களுக்கு வெறுமனே ஆரவாரத்தைக் கொ' த்து விட லாம். இதனால் பல்லாண்டு காலத்திற்குப் பின்னர் வரும் நம் சந்ததியினர் நுனிப்புல் மேய்பவராகி, பின் தங்கிப் போவதுடன், இந்த உணர்வு மயமான, அறிவு வாய்ப்படாத இலக்கியங்களைச் சுட்டிக் காட்டி, சில சுயநலமிகள் மக்களைக் கள்ளுண்ட நிலையில் வைக்கலாம். இதுவே எனது அச்சம்.’’

'பாவை! நீயும் நானும் பேதைகள். பெரியவர்களைப் பற்றிப் பேசப் பக்குவம் இல்லாதவர்கள்.”

'நானே சில சமயம் இவ்வாறே நினைக்கிறேன். ஆனால் முருகன், தந்தைக்கே பிரணவத்தை உபதேசித் தான் என்று புலவர்கள் புளகாங்கிதமாய்ச் சொல்லும்போது, நமக்கும் உபதேசிக்கும் தகுதி ஏன் இருக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.’’

'யவன நாட்டுடனும், இதர நாடுகளுடனும் ஒப்பிடுகை யில் நம் நானிலம் சாலச் சிறந்த நாடு.”

'தமிழ் இலக்கியத்தையே முழுக்க அறியாத உங்களைப் போன்றவரின் கேணித் தவளைத்தனமான வாதமிது. நம்மைப் போல் யவனரும் முன்னேறியுள்ளனர். நாம் சோதி வட்டக் கணக்கீடு செய்வது போல், அவர்களும் பல பொறி களைக் கண்டு பிடித்துள்ளனர். நாம் இந்த நாட்டில் பிறந்து விட்ட ஒரு காரணத்தால், நாட்டைப் போற்றி, நம்மை அறி யாமலே நம்மைப் போற்றுவது, நம் குறைபாடுகளை மிகுதி யாக்கி, தகுதிகளைக் குறைத்துவிடும். சொல்லப் போனால் நாட்டுப்பற்று சுயநலமிகளின் தமிழ் வணிகத்திற்கும் நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/161&oldid=600619" இலிருந்து மீள்விக்கப்பட்டது