பக்கம்:பூநாகம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 155

'என்னவனான வானவரம்பனிடம் .ே ச ந் த னி ன் தோழன் சொன்னானாம். நான், நேரில் அறிய சோலைக்கு வந்து உங்கள் திருவிளையாடலைப் பார்த்தேன்.??

நீ பார்க்கலாமா? தப்பில்லையா???

'தப்போ தவறோ? அந்தக் காதற் காட்சியைப் பார்த் ததும் ஒரு பலன் கிடைத்தது. ’’

என்னது???

'உங்கள் விளையாட்டைப் பார்க்கப் பார்க்க, எனக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. ஏன் என்று சிந்தித்தேன். பிறரின் மென்மையான நிகழ்ச்சி களை அறிய, எல்லோரும் ரகசியமாக விரும்புகின்றனர். இந்த ரகசியத்தைப் பகிரங்கமாக ரசிக்கத்தான் கூத்து’ என்ற ஒன்றைக் கண்டு பிடித்திருக்க வேண்டும். முதலில் கூத்தைக் கண்டு பிடித்தவன், என்னை மாதிரி, பிறர் ஈடு பாட்டை மறைந்திருந்து பார்த்து ரசித்தவனாகத்தான் இருக்க வேண்டும்!”

'ஆராய்ச்சி போதுமடி. சேந்தனை அண்மை நாளில் பார்த்தாயா?’’

'பார்த்தேன். பரத்தை ஒருத்தியுடன் புனலாடியதைl’’

'அம்மா...அய்யோ...என் மனம் என்ன பாடுபடுகிறது? ஏமாந்து விட்டேனோ?. அவனை நல்லவனென்று நம்பி விட்டேனே பாவை அவனை எப்படியாவது நீ சந்தித்து என் நிலைமையை விளக்க வேண்டும். செய்வாயா?’’

  • உன் நிலைமை என்ன???

நீயும் டெண்தான். புரிந்து கொள்ளவில்லையா? ஒரு வனைத் தொட்டுவிட்டு, இன்னொருவனைத் தொடலாமா?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/164&oldid=600622" இலிருந்து மீள்விக்கப்பட்டது