பக்கம்:பூநாகம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 157

'நான் குலமகள். கற்புக் கடன் பூண்டவள் நான். அந்நியன் ஒருவனைப் பார்ப்பது அழகா?’’

'அப்படியானால்... கழாத்தலையன் எனக்கும் அந்நியன். நான் மட்டும் சந்திக்கலாமா? நான் மனித குல மகளில்லையா???

'அது வந்து உன் நிலையில் இருப்பவர்கள் சந்திக் கிறார்கள். நீயும் சந்திக்கலாம்.’’

இதனால்தான் நான் புலவர்களைச் சாடினேன். தலைவி, தலைவனின் தோழனைச் சந்தித்து, நினைத்த தை எடுத்தியம்பியதாகக் காட்டாத கவிஞர்கள், தோழியை மட்டும் தலைவனையோ, அவன் தோழனையோ சந்திப்பு தாக வர்ணிக்கிறார்கள். இது முழுமையான இரட்டை வேடம். தோழிக்கு ஒரு கற்பு, தலைவிக்கு ஒரு கற்பா? கற்பென்பது சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கபடி இருக்கக் கூடியதா? என்னம்மா இது?’’

மருதி பொறுமை இழந்தாள். கணைய மாக்கட்டிலைப் பார்த்தாள். மயிற் பீலியைப் பார்த்தாள். மாடச் சுவரை யும், தன் இரு நிலை மாட வீட்டையும் பார்த்தாள். அணிந் திருந்த பொன்னாபரணங்களைப் பார்த்தாள். பிறகு இவை எதுவுமே இல்லாத, கருகுமணி மாலையும், முரட்டுச் சேலை யும் அணிந்திருந்த பாவையைப் பார்த்தாள்.

'பாவை வெங்கர்களுக்கு வீறாப்பு அதிகம் என்பது உண்மை போலும்! நீ எங்களை அண்டிப் பிழைப்பவள். என் நிலை வேறு. உன் நிலை வேறு. நீ கழாத்தலையனைப் பார்ப்பதில் தவறில்லை.”

மருதி! நீ இவ்வளவு தொலைவுக்கு வந்ததால், நான் உனக்கு இனிமேல் தோழியாக இருக்கப் போவதில்லை. இருந்தாலும் பழகிய பாசத்திற்காக உன் பொருட்டு ஒன்று சொல்ல விரும்புகிறேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/166&oldid=600624" இலிருந்து மீள்விக்கப்பட்டது