பக்கம்:பூநாகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தோழி செய்த புரட்சி

'சமூகத்தில் மேல்நிலையில் இருப்பதால் அது பெருமைப் படத் தக்கதுமன்று. கீழ்நிலை வெறுக்கத் தக்கதுமன்று. உறையூரில் இருந்து சோழ நாட்டை ஆண்ட தீத்தனைப் பற்றி அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். அவன் மகன் பெருநற்கிள்ளிக்கு செவிலித்தாயாக இருந்த காயற்பெண்டு என் அய்யாமை (பாட்டி). தித்தனுக்கும் கிள்ளிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னவன் பட்டத்துக்குரிமை இழந்து அலைந்தபோது அவனுக்காக உதவி செய்ய முயன்றவள் காவற் பெண்டு. இதனால், தித்தனின் சினத்திற்கு ஆளாகி, இங்கே வந்து குடில் போட்டுத் தங்கியவள் அவள். அவள் நினைத்திருந்தால் கிள்ளி பட்டமெய்தியதும், அவனை அணுகி உதவி பெற்றிருக்கலாம். ஆனால் அவள் தான் இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவே இல்லை. என் மகனை இங்கே தேடினால் எப்படி! அவன் ஏதாவது ஒர் போர்க்களத்கில் இருப்பான் போய்ப் பார்’ என்று மரத்தோடு சாடிய அவள் பாட்டைப் பலர் மெச்சினாலும், நான் வெறுக் கிறேன். என்றாலும், அவள் கொள்கையின் நிமித்தம் சுய மதிப்பிற்சாகவும் வளர்ப்பு மகனிடமே உதவி நாடாதவள். இதனால் பெருமி தப்படுகிறேன்.

'ஆனால் உன் தாய்வழி அன்னையான நக்கண்ணை யார், பெருநற்கிள்ளிமீது பெருங்காமம் கொண்டு கைக்கிளைப் பாடல்களை ப் பாடியவள். கிள்ளி எதிரியான மல்லனின் தலையை முறிக்கும்போதே, அவனைக் கட்டித் தழுவ நினைத்ததாய் காம மயக்கத்தில் பாடியவள். கிள்ளி அவ ளைக் கழித்து கட்ட வேண்டும் என்பதற்காக, இவ்வூரில் அவளை குன்றேறி நிற்க வைத்து, கண்பட்ட தொலைவு வரை இருந்த காணியையும் பொற்றாமரை யையும் கொடுத் தான். இப்படி வந்த சொத்துதான் உன் குடும்பத்தினது.

கோம உணர்வுகளை வெளியே காட்டிப் பலன் பெற்ற ஒருத்தியின் பேத்தி நீ பாச உணாவுகளையே அடக்கிப் பலனை எதிர்பாராமல் வாழ்ந்த ஒருத்தியின் பேத்தி நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/167&oldid=600625" இலிருந்து மீள்விக்கப்பட்டது