பக்கம்:பூநாகம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தோழி செய்த புரட்சி

பொருட்டு, பழகியதற்காக ஒன்று வேண்டுமானால் செய் கிறேன். உன்னோடு நானும் வருகிறேன். உனக்கு நான மாக இருந்தால், நானே வாதாடுகிறேன். அப்படியும் சேந்தன் மனம் மாறவில்லையானால், வானவரம்பனை விட்டு, உனனவன் எலும் ை முறிக்கச் சொல்கிறேன். ஆனால் எதற்கும் நீ உடனிருக்க வேண்டும். இன்னும் மூன்று நாழிகை நேரம் கொடுக்கிறேன். சிந்தித்துச் சொல் .”

பாவை உணர்ச்சிப் பிழம்பாகப் பேசி, பின்னர் சந்தனம் போல் குளிர்ந்து படியிறங்கிப் போய்விட்டாள். அவள் நிமிர்ந்த தலையையும், நேரான நடையையும் மருதி பார்த் துக்கொண்டே இருந்தாள்.

அவள் சொன்னது மருதிக்கு சினத்தைக் கொடுத்தாலும், சிந்திக்கவும் வைத்தது. கழாத்தலையனைப் பார்க்க, பாவை யுடன் போகலாமா என்று சிந்தித்துக் கொணடிருந்தாள்

என்றாலும், அவள் என்ன முடிவெடுத்தாள் என்று

தெரியவில்லை. காரணம், எந்தப் புலவரும், அதைப் பற்றிப் பாடியதாகத் தெரியவில்லை.

§§ SK §3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/169&oldid=600627" இலிருந்து மீள்விக்கப்பட்டது