பக்கம்:பூநாகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இரையும் இறையும்

அந்தக் காகத்திற்கு எங்கிருந்து அவ்வளவு அசுர பலம் வந்ததோ, எப்படித்தான் வந்ததோ, வாயுவேகத்தைவிட, ஒலி வேகத்தைவிட அதிகமான ஒரு வேகம். அதுதான் மனோவேகமோ? இறுதி வேகமோ? ஏதோ ஒரு வேகம். அந்த வேகம் அதை உயரத் தூக்குகிறது ஏழடி உயரத்தில் அதைத் தூக்கி நிறுத்துகிறது. ஒடிந்த இறக்கையை ஒட்ட வைக்கிறது. பிறகு இருபதடி இடைவெளிவரை அதைப் பறக்க வைக்கிறது. மனம் அடிக்கடி மாறக்கூடியதுதானே? அந்தப் பூனையை இப்போது நினைத்துப் பார்க்கக்கூட அதற்குத் திராணி இல்லை. எங்கே நிற்கிறோம் என்று தெரி யாமலே, அந்தப் பூனை, எங்கே நிற்கிறது என்பதை, இப் போது போன பயம் வட்டியும் முதலுமாய் திரும்பிவர, சுற்று முற்றும் பார்க்கிறது. ஒரு சின்னக்குச்சி பட்டதைக்கூடப் பூனையின் நகமோ என்று மீண்டும் கத்தியபடி உற்றுநோக்கி விட்டு, அது பூனை இல்லை என்பதால் எதிர்ப்புறத்தைப் பார்க்கிறது. என்ன அது?

சற்று நேரத்திற்கு முன்பு வரை, அதற்கு எமபயம் கொடுத்த அந்தப் பூனை ஏதோ ஒரு எமச் சக்கரத்தில் சிக்கி, அந்த நடுச்சாலையில் சதைப் பிண்டமாய்க் கிடக்கிறது. காக்கைக்குப் புரிகிறது சந்தேகமில்லை. லேசாய் நின்ற ஒரு மோட்டார் பைக், கர்ஜித்தபடியே பயணத்தைத் தொடர் கிறது.

அந்தக் காகம், அலகைச் சாய்த்துப் பார்க்கிறது.

அந்தப் பூனைச் சதை மேல் ஏறிக் கொள்கிறது. பிறகு வெறி பிடித்தது போல், அதைக் கொத்துக் கொத்தென்று கொத்துகிறது. அந்தக் காகம், கொத்திய சதையைத் தின்ன வில்லை. ஆனாலும் கொத்திக் கொண்டே இருக்கிறது.

§§ NK ఫి{

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/17&oldid=600473" இலிருந்து மீள்விக்கப்பட்டது