பக்கம்:பூநாகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு விட்டுக் கூடு...

அதுவரை மேல்வரிசை பற்களையும், கீழ்வரிசைப் பற்களையும் ஒரே வரிசை பற்களாக்கி, அவற்றுக்கு மேல் படிந்த இரு உதடுகளையும் ஒரே உதடாய் ஒட்ட வைத்து, தனக்குத்தானே, வலுக்கட்டாயமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த கதிர்மணி, இப்போது முன்னெச்சரிக்கை களை தூக்கி எறிந்துவிட்டு, அழுத்தம் திருத்தமாக அவர் களை பார்த்துக் கேட்டான்.

'பத்து மணிக்கு செய்தியாளர் கூட்ட முன்னு பேரு . இப்போ பதினொன்று பத்து. இதுக்கு மேலயும் நாம காத் திருந்தா நமக்குப் பேரு ப்ரஸ்டு மேன் இல்ல. பிரஸ்சுடு மேன் . லெட் அஸ் கோ. வாங்க போகலாம்!’’

அந்த செவ்வக அறைக்குள் வியாபித்திருந்த முட்டை வடிவ மேஜையை சுற்றி போடப்பட்ட முதல்வரிசை மெத்தை நாற்காலிகளில் அந்த காலத்து ஜமீன்தார்கள் மாதிரி சாய்ந்து கிடந்தவர்கள், கத்தியவனை கண்களால் ஒரு குத்து குத்தி விட்டு, மீண்டும் தமக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார் கள். அதே சமயம், இரண்டாவது வரிசை பிரம்பு நாற்காலிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/18&oldid=600474" இலிருந்து மீள்விக்கப்பட்டது