பக்கம்:பூநாகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 கூடு விட்டுக் கூடு.

காரர்கள் எழுந்திருக்கப் போவதைப் போல் உடம்பை நெளித்தார்கள.

அந்த முதல் வரிசை நிருபர்கள், இந்த இரண்டாவது வரிசைக்காரர்களுடன் இந்த அறையை நோக்கி வரும்போது ஆரம்பத்தில் நாகுக்காய் நடந்து, அப்புறம் முண்டியத்தும் பிறகு வெட்கததை விட்டுக் கொடுத்தும் முதல் வரிசையை பிடித்துக் கொண்டார்கள். இப்படி பிடித்துக்கொண்டு தங் களை பிரபலப்படுத்துபவர்கள் என்பது அல்லாமல் பிரபல பத்திரிகைகளை சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போாைல் அதற்கு ஏறுக்குமாறு...முன்னூறு பிரதிகளை மட்டுமே அச்சிட்டு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விநியோகிக்கும் 'தினக்குத்து’ பத்திரிகையாளன் மோகனன் முதல் வரிசையில் முதல் நாற்காலியில் அட்டகாசமாக گاه கார்ந்திருந்தான்.

நாலு பேருக்குத் தெரியக்கூடாது என்ற வைராக்கியத்தில் பத்திரிகையை ரகசியமாக அச்சடித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கும், செய்தி பத்திரிகை ஆணையாளருக்கும், வாரத்தில் ஒரு கட்டாக அனுப்பும் 'தினக்கன்’ பத்திரிகை நிருபன் அடுத்த நாற்காலியை ஆக் கிரமத்திருந்தான். ஆக மொத்தத்தில் தத்தம் பத்திரிகைப் பெயர்களையே மறந்து போகும் பல செய்தியாளர்கள்; காதில் நுழையாத பெயரை வாய் வழியாக விடும் நிருபர்கள் முதல் வரிசைக்காரர்களானார்க . பின் வரிசை பிரம்பு நாற்காலி களில் பிரபல பத்திரிகை நிருபர்களும், ஏஜன்சி செய்தியாளர் களும் இடது கையில் ஒரு குறிப்பேட்டுடனும், வலது கையில் ஒரு பேனாவுடனும் ஆயத்த நிலையில் இருந்தார்கள்.

கதிர்மணி, நெளிந்து கொண்டிருந்த தனது சகாக்கள் மீண்டும் நிலைகொண்டதைப் பார்த்துவிட்டு, மீண்டும் கத்தினான். ஓங்கிக் கத்தினால், அந்தச் சத்தத்திலேயே கீழே விழுவது மாதிரியான பூஞ்சையான உடம்பு, முக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/19&oldid=600475" இலிருந்து மீள்விக்கப்பட்டது