பக்கம்:பூநாகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு , சமுத்திரம் 11

கண்ணாடி மட்டும் இல்லையென்றால் அவன் முகத்தில் இருக்கும் கண்களை பார்க்க முடியாது. ஆனால், அவன் உடம்பே ஒரு ஏ.கே. 47 போல் துள்ளியது.

'நாம என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரியா ? காத்துக்கிடக் கறதுக்கு-நாம அவுங்கள மாதிரி அடிவருடிகளும் இல்லஆணவக்காரர்களும் அல்ல- நெய்தர் சைக்கோபான்ட் நார் அரகண்ட். லெட் அஸ் கோ. திஸ் ஈஸ் டு மச்! ’’

கதிர்மணி, கைக்கெடிகாரத்தைப் பார்த்தபடியே வாச லோரம் வந்தபோது பல செய்தியாளர்கள் எழுந்துவிட்டார் கள் . இதுவரை அவனை கண்டுக்காமல்’ இருந்த பி.ஆர். ஒ., பதறிப் போனார். மாண்புமிகு அமைச்சர் வருகை புரிவ தற்கு திட்டமிட்ட பத்து மணியில் நிற்காமல், பதினோரு மணியைத் தாண்டிய தனது இன் சபாடினேட் கடிகாரத் திடம் விளக்கம் கேட்பது போல் அதைத் தட்டினார். இதற் குள் அமைச்சர் அந்தப் பக்கமும், செய்தியாளர்கள் இந்தப் பக்கமும் நடுச்சந்தியில் சந்திக்கும் நிலைமை ஏற்படப் போனது.

பி.ஆர்.ஒ., செய்தியாளர்களின் மோவாய்களை ஆட்டி, உடம்பை மூன்றடியாய் குழைத்து, அவர்களை வாசலுக்கு சிறிது வன்முறையோடு தள்ளிவிட்டு, அமைச்சர் வரும் திக்கை நோக்கினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அண்டர், அசிஸ்டென்ட், டெபுடி, ஜாயிண்ட், அடிஷனல் செகரட்டரிகளோடும், மேலும் ஒரு முழு செகரட்ரியோடும் சாவகாசமாக வந்தார். இரு பக்கமும் புடைசூழ்ந்த சின்னச் சின்ன அதிகாரிகள். ஒரு கையால் தத்தம் வாயில் பாதியை அடைத்து அதன் மேல் பகுதியை பட்டையிலிருந்து பதனி குடிப்பது போல் வைத்துக்கொண்டு, மீதி வாயால், அமைச் சரிடம் எதையோ சொல்லிக் கொண்டும், சொல்லிக் கொடுத் துக் கொண்டும் கூடவே வந்தார்கள். பி.ஆர்.ஒ., அமைச்ச ரைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடும், செகரட்டரியை பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/20&oldid=600476" இலிருந்து மீள்விக்கப்பட்டது