பக்கம்:பூநாகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 17

மாண்புமிகு அமைச்சர் மடார் என்று எழுந்தார். அவ ருடன் அதிகாரிகள் மட்டுமல்ல, பல முதல் வரிசை செய்தி யாளர்களும் எழுந்து விட்டார்கள். பி.ஆர்.ஒ., அறிவித்தார்: மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரால லஞ் சத்துக்கு. மன்னிக் கனும் லஞ்சுக்கு வரமுடியல. அவரை மன்னிக்கும்படி கேட் டுக்கச் சொன்னார். வாங்க போகலாம், ஒரு வேனும், நாலு அம்பாசிடர் காரும் ரெடி.’’

மாண்புமிகு அமைச்சர், தன்னால் லஞ்சுக்கு வரமுடி யாது என்று பி.ஆர். ஒ.விடம் தனிப்பட்ட முறையில் இரண்டு வார்த்தைகளில் சொன்னதை, அந்த பி.ஆர் ஒ., பத்து வார்த்தைகளாக்கிச் சொல்லி விட்டானே என்று ஆத்திரப் பட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் அதை காட்டிக் கொள்ள முடியாது என்பதால், உண்மையிலேயே நோய்வாய் பட்டவர் போல் இருமிக்கொண்டும், முன் நெற்றியை அழுத் திக்கொண்டும் எழுந்தார். சில நிருபர்கள், சீக்கிரம் உங்க ளுக்கு குணமாகட்டும். சார்,' என்றார்கள்.

மாண்புமிகு அமைச்சர் தனது அறைக்குள் வந்தார். அவரை அங்கே எதிர்நோக்கிக் காத்திருந்த உதி.கள்? போட்ட வணக்கங்களை ஏற்றுக் கொள்ளாமலே அதிகாரி களுடன் தமது அறைக்குள் நுழைந்தார். அவருடன் ஒப்புக்கு பேசிய உயர் அதிகாரிகளுக்கு, தத்தம் வீடுகளில் ஐ.டி க் காரன், ஈட்டிக்காரன் மாதிரி ஆயுதபாணியாக வருவானா என்ற பயம்; நழுவி விட்டார்கள அமைச்சர் டெலிகாமில் பி.ஏ.,விடம் கத்தினார்.

'முந்தா நாள் என்னைப் பார்க்க வந்தானே, அவன் தினததகவல் உரிமையாளன் தானே. லைன் போட்டுக் கொடு...??

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/26&oldid=600482" இலிருந்து மீள்விக்கப்பட்டது