பக்கம்:பூநாகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கூடு விட்டுக் கூடு.

அமைச்சர் அந்த டெலிபோனால் முதலாளியை அடிக்கப்: போவது போல் கத்தினார்.

'அலோ... வணக்கம். வணக்கம்... நான் அமைச்ச ரோட பி.ஏ., இல்ல. அமைச்சரேதான். என்ன தம்பி இது, நீங்க புதுசா பத்திரிகை ஆரம்பிச்சிருக்கிறதாயும் அது நடு நிலை பத்திரிகைன்னும் என்கிட்ட சொன்னிங்க. இப்போ தைக்கு பிரபல பத்திரிகைகளோட போட்டி போடணு முன்னா, அரசு விளம்பரம் வேணுமுன்னும் கெஞ்சினிங்க, நானும் பச்சாதாபப்பட்டு, உங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் படி சி.எம்.,க்கு நோட் போட்டிருக்கேன். யாருக்கு வேனும் உங்க தேங்க்ஸ். சொல்றதக் கேளுங்க, உங்க நிருபர் கதிர் மணியோ, பதர்மணியோ. இன்றைய பிரஸ் கான்பிரன்ஸ்ல என்னைப் பார்த்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்டுட் டான் வேட்டிய உருவாதகததான். என் வீட்டுல ரெய்ட் நடந்தா இவனுக்கு என்னய்யா, என்ன, ஒங்களுக்கு அவ னைப் பற்றி இது மாதிரி பல கம்ப்ளையன்ட் வந்திருக்குதா... அப்போ ஏன் அவன வெச்சிருக்கீங்க; டிஸ்மிஸ் ஆனது மாதிரிதானா, ரெய்ட் நியூஸ் வராம பார்த்துக்குங்க. நானி ருக்க விளம்பரத்திற்கு பயம் ஏன்?’’

மாண்புமிகு அமைச்சர் மறுநாள் அந்த பத்திரிகையில் ரெய்ட் செய்தி வராததில் திருப்திப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இரண்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் கதிர்மணியை காணாததில் கம்பீரப்பட்டார். இதற்குள் காளமேகத்தின்மீது ஊழல் விசாரணை முடிந்து சி.ஐ.டி.யின் அறிக்கை அரசுக்கு கிடைத்தது. அதன் விவரங்களை வெளிப்படுத்துவதற்காக அதே முட்டை மேஜையில் ஒரு செய்தியாளர் கூட்டம். போலீஸ் அறிக்கை நகல்கள் அனைத்து செய்தியாளர்களுக் கும் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏதாவது கேள்வி இருக் கிறதா என்று மாண்புமிகு அமைச்சர் அதிகார தோரணை யில் கேட்டார். ஒரு கேள்வி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/27&oldid=600483" இலிருந்து மீள்விக்கப்பட்டது