பக்கம்:பூநாகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபுரம்

அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப் போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு அவுட் ஹவுஸ்ாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின் கதவின் அருகே போடப்பட்டிருந்த இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத் துடைப்ப தற்காகப் பயன்படுத்தும் அழுக்குத் துணி அப்பிக் கிடந்தது. இரண்டு கைகளையும் எடுத்துக் கட்டில் கால்களில் கட்டிப் போட்டிருந்தார்கள். கண்களில் நீரூற்றாகி, கன்னங்களில் அருவி போல் பொழிந்த நீர், தரையில் துளித் துளியாய் விழுந்து கொண்டிருந்தது. வாயில் துணி இருந்ததால் மஞ்சள் பூத்த அவள் முகம் வாயற்ற வடிவமாய் வதங்கிக் கிடந்தது.

அந்தப் பின்னறையின் ஒரு மூலையில் தள்ளாத வயது மூதாட்டி காமாட்சியின் இரண்டு கைகளும் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. முட்டிக்கால்களே வாய்ககு அடைப்பாக, அவள் குறுக்கப்பட்டிருந்தாள். பேத்தியையும் பேரனையும் பிரிக்கக் கூடாது என்று பெரிய மனது வைத்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/29&oldid=600485" இலிருந்து மீள்விக்கப்பட்டது