பக்கம்:பூநாகம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 21

போல் அவளருகே அதே மாதிரி பதினைந்து வயது பையன் ரவி, ஒயர் கயிறால் முடக்கப்பட்டுக் கிடந்தான். கோமதிக்கு முன்னால் ஒருவன் கசாப்புக் கத்தியோடு நின்றான். இன்னொருத்தன் பாட்டியின் பக்கம். மூன்றாமவன் அங்கு மிங்குமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான்காவது ஆசாமி முன்னறையில் மீனாவைச் சுவரோடு சுவராக நிறுத்தி, அவள் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டிருந் தான். அவள் தொண்டையில் லேசாக ரத்தக் கோடு தெரிந்தது. அவர்கள் கையிலிருந்த கத்திகள் அவர்கள் கண்களையே கூச வைத்தன.

எல்லாம் ஏழெட்டு நிமிடங்களில், சினிமாவில் நடப்பதை விட, படு வேகமாக நடந்துவிட்டது. மணி இரவு எட்டுத்தான் இருக்கும். ஆனால் பலத்த மழை. ஒவ்வொரு மழைக்கோடும் வெள்ளிக் குச்சியாய் பூமியை விளாசிக் கொண்டிருந்த நேரம். மின்னல்கள் இடி இடியாய் இடித்துக் கொண்டிருந்த வேளை: வழக்கம்போல் கார்ப்பரேஷன் தெரு விளக்குகள் கண் பார்க்க வில்லை.

மழையைப் பார்த்த உடனேயே மயிலாகிறவள் மீனா வீட்டின் வராந்தாவில் மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்தபடி பூமி கிரகித்த மேக வெள்ளத்தையும், அந்த வெள்ள அருவி யின் சங்கீத நர்த்தனத்தையும் தவளைகளின் மிருதங்கச் சத்தத்தோடு ரசித்துக் கொண்டிருந்தவள், மின்னல் வெடிப்பு களுக்குப் பயந்து போய், நாற்காலியைக் கூட எடுக்க மறந்து போய், உள்ளே போய் கதவை மூடிக் கொண்டாள். சமைய லறைக்கு அடுத்த அறையில் ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைத்து, மழையை ரசித்துக் கொண்டு தண்ணிரைத் தரை யில் விட வைத்த தம்பி சிவாவை, ஓர் அதட்டுப் போட்டு, அவனையே அந்த ஜன்னலை மூடும்படி செய்தாள். பின் பக்கம் உள்ள தாழ்வார அறையில் காமாட்சிப் பாட்டி இருமிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மழை வாடையே ஆகாது. ஆகையால், மூக்கு மழை பொழிய வாய் இடிகளாக, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/30&oldid=600486" இலிருந்து மீள்விக்கப்பட்டது