பக்கம்:பூநாகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கோபுரம்

முதியவள் தானே ஒரு தனி மழை என்று காட்டிக் கொண் டிருந்தாள்.

சமையலறையில் கோமதி, பாத்திரங்களைக் குடையும் சத்தம் மழைச் சத்தத்தில் அதிகமாகக் கேட்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு பாத்திரக் கழுவலுக்கும் ஒரு தடவை ‘அவரைக் காணமே, இந்த மழையிலே எங்க நிக்கறாரோ என்று தன் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டாள். பிறகு அவர் வருகிறாரா என்று பார்ப்பதற்கு ஜன்னல் கதவு ஒன்றின் கொக்கியை அகற்றியபோது, அந்தக் கண்ணாடி ஜன்னல் பட்பட்டென்று அந்த வீட்டிற்கு மாரடிப்பதுபோல் அடித்தது. பின் பக்கம் கிடந்த பாட்டியம்மாள் சீனி வரலியா, சீனி வரலியா என்று இருமல்களுக்கு இடையே கேட்டாள் . உடனே மருமகள காரி, மகள் இருந்த அறைப் பக்கம் போய் "அப்பாவைக் கானுமே” என்றாள். 'வந்துடுவாரும்மா” என்று மகள் சொல்வதை கேட்க வேண்டும் என்று ஒரு ஆறுதல். அந்த மகளோ, வந்துடுவார்’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு முகத்தைப் பின்பக்கமாகத் திருப்பி, 'பாட்டி. பாட்டி ஸ்விட்சை தொட்டு வச்சுடாதே. நல்ல நாளுலேயே ஷாக் அடிக்கும். மழை சமயத்துல கேட்க வேண்டாம்’ என்று சொன்னாள். பிறகு தம்பியைப் பார்த்து அப்பாவைப் போய் பார்த்து விட்டு வாயேண்டா தடியா என்றாள். அவன் அவள் மீது தடிப்பார்வையைப் போட்டு விட்டுப் புறப்படப் போனபோது, அக்காக்காரி அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். எல்லோரும் அவரைக் காலுமே என்று கவலைப்பட்ட நேரம். அதே சமயம் மழைககு எங்கேயாவது ஒதுங்கியிருக்கலாம்.

இந்தச் சமயத்தில்தான் காலிங்பெல் சப்தம் கேட்டது. பையில் வைத்திருக்கும் டிரான்ஸிஸ்டர் ரேடியோ செட் மாதிரி கதவின் மேல்புறச் சுவரில் பொருத்தி வைக்கப்பட்டி ருந்த ஒரு சின்ன செவ்வகப் பெட்டியின் அடிவாரம் தீப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/31&oldid=600487" இலிருந்து மீள்விக்கப்பட்டது