பக்கம்:பூநாகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கோபுரம்

சென்றான். இன்னொருத்தன் சிவா இருந்த அறைக்குள் போய், அவன் கரங்களைப் பின்புறமாக வளைத்து நகர்த்திக். கொண்டிருந்தான். ஒரே ஒருத்தன் மட்டும் அந்த வீடு முழு வதையும் நோட்டம் போட்டுக்கொண்டிருந்தான். காமாட்சிப் பாட்டி கத்தப் போகிற சத்தம் கேட்டது. பிடிபடும் கோழி ஆடி அடங்குவது போல் அவள் சத்தமும் அடங்கியது. தள்ளிக்கொண்டு வரப்பட்ட, கோமதி இரும்பு மேஜையுடன் கட்டி வைக்கப்பட்டாள். வீட்டை நோட்டம் போட்டவன், எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒரு ஜீரோ வாட் சிவப்பு விளக்கை மட்டும் எரிய விட்டான்.

கதவுப் பக்கத்துச் சுவரில் கத்தி முனையில் நிறுத்தப்பட் டிருந்த மீனாவை, காவல் காத்தவன், அந்தக் கத்தியை எடுத்து ஒரு கையில் கொடுங்கோலாய்த் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையால் அவளை அரை வட்டமாய்ச் சுற்றித் தனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான். தூக்கிப் பிடித்த கத்தியை அவள் பிடறியில் வைத்துக்கொண்டு 'உ.ம்...நட’’ என்று சொல்லிவிட்டு, பிடறிபட்ட கத்தியை லேசாய் அழுத்தினான். கண்களில் மீன் குஞ்சுகளை, பேருக்கு ஏற்றாற்போல் நீந்த விட்டிருப்பது போல் தோற்றம் காட்டும் மீனா , இப்போது கண்களே அற்றுப் போனதுபோல் குனிந்து நடந்தாள். நிமிர்ந்தால் பிடறி அறுபடும் நிலை. பிராண வலி, முகமே கண்களுக்கு மூடியாகப் போன அவளை அம்மாவுச்கு முன்னால் நிறுத்தினான். தாயும் மகளும் விம்மி னார்கள். மகளின் வாயை அவன் கைகளால் பொத்தினான். இருமலை வெளிப்படுத்த முடியாமல் திண்டாடிய பாட்டியும், அவள் பேரனும், காதுக்குச் சரியாய் கேட்காத கலவைச் சத்தங்களை எழுப்பினார்கள்.

இதற்குள் மீனாவுக்கும் கோமதிக்கும் இடையே இரண்டு பேர் வந்தார்கள். மீனா கண்களால் அம்மாவைச் சுட்டிக் காட்டி, அவர்கள் தலைவன் போலிருந்த ஒருவனைப் பார்த் துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் கிருதா மீசைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/33&oldid=600490" இலிருந்து மீள்விக்கப்பட்டது