பக்கம்:பூநாகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 25

காரனும் அல்ல. இந்த மாதிரியான காரியங்களுக்கான உடம்பனும் இல்லை. அசல் சாதாரணம். நீலப் பாண்ட் பச்சை சட்டை. இருட்டில் டாலடித்த கடிகாரம். ஆக மொத் தத்தில் ஜென்டில்மேன்-கேடி. மீனாவிடம், சாவகாசமாகச் சொன்னான்,

'ஒங்க உயிருக்கு இவங்ககிட்ட யிருந்து நான் காரண்டி கொடுக்கிறேன். ஆனா அதுக்கு நீங்க நான் சொல்றதைச் செய்யனும்.

சட்டுப்புட்டுன்னு ஒங்கம்மா கழுத்துல, காதுல, கையில் கிடக்கறதைக் கழட்டு டேய் உன்னைத்தான். கிழவிகிட்ட ஏதாவது தேறுமான் னு பாருடா. ’’

மீனா, தயங்கினாள். அவள் தயங்கத் தயங்க, அவள் பிடறியில் கத்தி அழுத்தியது. அவள் வலி பொறுக்க முடியா மல் சிணுங்கினாள். உடம்பை நெளித்தாள். அந்த அவஸ் தையைப் பார்த்த அம்மா, மகளைத் தன் பக்கம் வந்து ஆக வேண்டியதைச் செய்யும்படி தலையசைத்தாள். இதற்குள் ஒருத்தன் அவள் ஆட்டிய தலையை இரும்புச் சட்டத்தில் அசைவற்று வைத்து அழுத்தினான். இப்போது, அம்மாவின் அவஸ்தையைப் பார்க்க முடியாததுபோல் மீனா யந்திரகதி யில் செயல்பட்டாள். அம்மாவின் மூக்குத்தியையும், கை வளையல்களையும் கழுத்துச் செயினையும், வேக வேகமாகக் கழற்றி ஜென்டில்மேன்-கேடியிடம் கொடுத்தாள்.

அடுத்து, மீனா பீரோ இருந்த அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். இப்போது அவள் கத்தியின் உந்துதல் இல் லாமல் தானாகவே நடந்தாள். குடும்பத்தினரின் கட்டுக்கள் சீக்கிரம் அறுபட வேண்டும் என்று ஒரு ஆவேசம். பீரோவின் அலமாரிக்குள் இருந்த கல் அட்டியல், எட்டுப் பவுன் உருட் டுச் செயின், நான்கு தங்க வளையல்கள் ஆகியவற்றைப் பாராமுகமாக எடுத்து ஜென்டில்மேன்-கேடியிடம்’ கொடுத் தாள். அவன் அவற்றை வலது கையில் வைத்துக் குலுக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/34&oldid=600491" இலிருந்து மீள்விக்கப்பட்டது