பக்கம்:பூநாகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 27

மனைவி கட்டப்பட்டிருக்கும் திசையை அவர் மேல்நோக்கிப் பார்த்தபோது, கோபுரம் போல் தோன்றிய படங்கள் அவர் கண்களில் தென் பட்டன. குறுக்காய் அடிக்கப்பட்ட வரி வரி யான இடைவெளிகளுக்கு இடைவெளி விட ட சட்டங்கள். அடியில் ஒரு பக்கம் மீசை முறுக்கோடு பாரதி. இன்னொரு பக்கம் நறுக்கு மீசை பாரதிதாசன். அதற்கு மேல் கையை மடக்கி வைத்துக் கொண்டு வீறாப்பாய் நிற்கும்(விவேகா னந்தர். இந்த மூன்று படங்களுக்கும் மேல் இரட்டைப்படம். ஒரு பக்கம் சுபாஷ் சந்திரபோஸ். மறுபக்கம் பகத்சிங். இந்த இரண்டு படங்களுக்கும் மேல் ஒரு சின்னப்படம். ஒரு பொக்கை வாய்க் கிழவனின் படம்.

சீனிவாசன், அந்தப் படங்களையே பார்த்தார். அச்ச மில்லை அச்சமில்லை’ என்று மீசைக்காரன் பாடுவது காதில் ஒலித்தது. கொலை வாளினை எடுடா என்று நறுக்கு மீசைக்காரன் அவரை உற்றுப் பார்த்தான். 'எழுமின், விழி மின்’ என்றார் விவேகானந்தர், ஒரு நாட்டுச் சுதந்திரத் தைப் போல் வீட்டுச் சுதந்திரமும் அது பறிபோகும்போது மெளனிப்பவன் கோழை’ என்றார் சுபாஷ். அந்த பொக்கை வாய்க் கிழமோ, செய் அல்லது செத்துமடி’ என்றார். வெள்ளையனே வெளியேறு என்பது கொள்ளையனே வெளி யேறு’ என்பது போல் கேட்டது.

樣 率 率

சீனிவாசன் யோசிக்கவில்லை, கழுத்தில் பட்ட கத்தியை தன் பங்குக்கும் தடவிக்கொண்டே அவர்களைப் பார்த்து அமைதியாகப் பேசினார்.

'நல்லாக்கேளுங்களப்பா. நான் உங்களைப் போகவிடா விட்டால் நீங்க என்னைக் கொல்ல வேண்டியது வரும். என் குடும்பத்தையும் சின்னாபின்னமாகச் சிதைக்க முடியும். இதைத் தெரிந்துதான் சொல்றேன். எனக்கு ஆபீஸ் உத்தி யோகம் மாதிரி. உங்களுக்கும் இது ஒரு உத்தியோகம். நீங்க கொள்ளையடிச்சுட்டுபோனதா, நாளைக்கு போலீஸ்ல புகார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/36&oldid=600493" இலிருந்து மீள்விக்கப்பட்டது