பக்கம்:பூநாகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கோபுரம்

கொடுப்போம் என்கிறதும் உங்களுக்குத் தெரியும். அதனால் நாய்தான் வருமே தவிர நகை வராதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சது மாதிரியே எனக்கும் தெரியும். போலீஸ்காரன் உங்களுக்குக் கூட்டாளியா இல்லாவிட்டாலும், பகையாளியா இல்லை என்பதும் எனக்குத் தெரியும். இன்னும் ஒங்களுக்குத் தெரிஞ்ச ஒண்ணே ஒண்ணையும் சொல்லிடறேன். கள வுைன் னு வந்தா கவலைப்படாத போலீசும், இந்தத் தெருவும்: கொலைன்னு வந்தா உங்களை கூண்டுல ஏத்தாம விடாது. பத்திரிகைக்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க...உங்களுக்குத் தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் ஆயுள் தண்டனை வராமப் போகாது. சும்மா இந்த மாதிரி கத்தியை வச்சு மிரட் டாதே உன்னால ஆனதைப் பாரு...எனக்கு நீங்க நகையை எடுத்துப் போறது பெரிசில்லேடா...ஆனா, நீங்க எந்த வீட்ல வந்து வேணுமுன்னாலும் வந்து அங்க இருக்கறவங்களை எப்படி வேணுமுன்னாலும் செய்து அட்டூழியம் பண்ணலா முனு உங்ககிட்ட ஒரு அகங்காரம் இருக்கு பாருங்க. அதுக் குத்தாண்டா நான் கோபப்படறேன். ஆறிலேயும் சாவு. நூறிலேயும் சாவு. லட்சக்கண ச்குல வந்த மாமூல்களை உதறிட்டு என் மகளுக்காக வேர்வை சிந்தி கிராம் கிராமாச் சேர்த்த நகைகளை உங்களுக்குக் கொடுக்கறதைவிட என் உயிரைக் கொடுக்கத் துணிஞ்சிட்டேன். உ.ம். ஏண்டா சும்மா நிக்க lங்க.. ஆனதைப் பாருங்கடா..??

st 毒 事

அந்தக் கொள்ளையர்கள் அசந்து போய் விட்டார்கள். அவர் முகத்தை சுவரோடு வைத்து இடிக்கப் போன ஒரு தடி யனை ஜென்டில்மேன்-கேடி தடுத்து விட்டான். கையைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்துக்கொண்டு அங்குமிங்குமாக உலாத்தினான். அவர் சொல்வது அவனுக்கு நன்றாகவே பட்டது. ஒரு கொலையைச் செய்தால் நகைக்கு நகையும் போய் தூக்குக்கு தூக்கும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தவன் போல் தலையை அங்குமிங்கும் வட்டமடித் தான். அவன் முடிவையே பிறர் ஆவலோடு எதிர்பார்த்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/37&oldid=600494" இலிருந்து மீள்விக்கப்பட்டது