பக்கம்:பூநாகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 29

கள். மீனா பிடறியில் பட்டிருந்த கத்திகூட கால் அங்குல இடைவெளி விட்டு நின்றது. ஆனால் கட்டிப்போட்ட கோமதி முண்டியடித்தாள்.

சீனிவாசன், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கை களை அந்த விவேகானந்தர் மாதிரி கட்டிக் கொண்டார். பார்வையை அந்த பாரதி விட்டுக் கொண்டார். மனைவி அப்படி கட்டுப்பட்டுக் கிடப்பதைக் கூட சாதாரணமாகப் பார்ப்பது போல் பார்த்தார். ஒருத்தனின் பிடிக்குள் திமிறிய மகளை அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது மாதிரி யும் எதிர்பார்த்த விஷயம் என்பது மாதிரியும் பார்த்தார். பார்வைக்கிடையே, ‘'நீ பாரத மாதாடி... அழக்கூடாது? என்றார் கம்பீரமாக.

கேடிகளுக்குப் புரிந்துவிட்டது. ஒரு கொலையைச் செய் யாமல் அங்கிருந்து போக முடியாது. இப்போது எதையோ பறிகொடுத்தவர்கள் போல் அவர்களே தவித்தார்கள். இறுதி யில் ஜென்டில்மேன் கேடி அவன் முன்னால் வந்து மரியாதை யோடு கேட்டான்.

நகைகளைத் திருப்பிக் கொடுத்துடறோம். உங்களை யும் உயிரோடு விட்டுடறோம. நாங்க கதவைத் திறந்து வெளில போகும்போது சும்மா இருப்பீங்களா???

என் வீட்டுக்கு அத்துமீறி வந்தவங்களை வெளியேத் தறது மட்டும்தான் என் வேலை...'

சீனிவாசன் அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் நின்ற போது, அந்த நால்வரும் ஒரளவு தைரியப்பட்டு அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கதவைத் திறந்தார்கள். ஓடாமலே நடந்தார்கள் சீனிவாசனுக்கு அந்த கோபுரப் படங்கள் மீது எவ்வளவு நம்பிக்கையோ, அவ்வளவு நம் பிக்கை இந்த சீனிவாசன் மீது அந்தத் திருடர்களுக்கு.

总 8& 8&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/38&oldid=600495" இலிருந்து மீள்விக்கப்பட்டது