பக்கம்:பூநாகம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 35

யோட உடல்தான் மொதலு, ஒரு பணக்காரன் உடம்பைவிட ஒரு ஏழை உடம்புதான் முக்கியம், அதுலயும் இப்படி ஒரு தறுதலைப் பிள்ளை யை பெத்தவன் போயிட்டா, குடும்பமே சின்ன பின்னமாயிடும். சரி, சரி. காத்தை அடைக்காம வழியை விடுங்க.’’

அந்தக் காலத்து வில்லுப்பாட்டாளியான பெரிய ஆறுமுகம், கன்னையாவின் அருகே போனார். அவர் கன்னங்களைத் தடவி விட்டார். அவரைப் பார்த்து, கன் னையா மூச்சால் பேசுவது போல் ஏதேதோ உளறிய போது, அவர் ஆறுதல் சொன்னார்.

'மன சைக் கலங்க விடாதடா. வேணும்னா பாரு... ஒனக்கு ஆயுசு நூறு பேரன் பேத்திகளோட கொஞ்சிக் குலாவிட்டு அவங்க வழியனுப்பிச்சு வச்சப்பறம்தான் போகப் போற ஏல. ராமசாமி ஒஹோ. இப்ப ஒன் பேரு கலைச் செல்வனோ? கழுதைக்குப் பேரு முத்துமாலையாம் நீயும் பித்துப் பிடிச்சு நின்னா எப்படி? கோணச் சத்திரத்துக்குப் போயி டாக்சிய கூட்டிட்டு வா... டவுனுல டாக்டர்கிட்ட ஒங்கப்பாவை உடனே காட்டணும். காய்ச்சல் இன்னிக்குப் போயிடும் நாளைக்கப் போயிடும்னு ஒங்கம்மா தான் அறிவில்லாம இருந்தா. ஒனக்கு எங்கல அறிவு போயிட்டு???

'எங்க அண்ணன் மகன் ஒரு வாரத்துக்குப் பிறகு இன்னிக்குக் தான் வந்திருக்காக, அதுவும் கட்டுலுல கிடக்கிற பெத் தவனப் பார்க்கறதச்கு இல்லே எதோ அக்கனிநா க்தோ கிச் கினிநாத்தோ, அவனுக்குச் சங்கம் அமைக்கப் போறா களாம். இ வுக கவலையிலேயே எங்கண்ணாச்சி, கட்டுலுல விழுந்துட்டாக... ’’

கன்னையாவின் தங்கை அமிர்தவல்லி, வந்ததோடு வந்த கையாய் வாயைப் பேசவிட்டாள் அவளையே உற்றுப் பார்த்த பெரிய ஆறுமுகம், பிறகு ராமசாமி என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/44&oldid=600502" இலிருந்து மீள்விக்கப்பட்டது