பக்கம்:பூநாகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதிய போதை

கலைச்செல்வனின் பறட்டைத் தலை முடியைச் செல்வமாகப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆட்டிக் கொண்டே பேசினார்.

'இனிமேலாவது புத்தியோட இருடா... சீக்கிரமா போய் டாக்சிய கூட்டிட்டு வா. கைக்காவலுக்கு எதுக்கும் ஐம்பது ரூபா எடுத்துட்டுப் போட ஏன்னா கோணச்சத்திரத்தில இருக்கிற வாடகைக் கார்க்காரங்க எல்லோரும் கூடிப் பேசி நம்ம ஊருக்கு வசறதா இருந்தா... டிடாசிட் வாங்கணும்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். ஏன்னா - ஊருக்கு வார காருங்களை நம்ம பயல்வ பஞ்சராக்கறாங்களாம். சிலரு இதோ வந்துட்டேன்னு எங்கோ ஒடிப் போயிடறாங்களாம். ஒன்ன மாதிரி நம்ம ஊரும் அவ்வளவு பிரசித்தம். சீக்கிரமா

போ...??

事 鄰 歇

குடும்பத்தில் மகத்தான பொறுப்பைத் தியாக மனப் பான்மையோடு ஏற்றுக் கொள்வது போல் அங்குமிங்குமாய்ப் பார்த்த கலைச்செல்வன், சட்டைப் பைக்குள் கையை விட்டான். அவன் போட்டிருந்த ஸ்போர்ட் பாண்டிற்குள் ஒரு பையில் ஒரு கிழிந்த சினிமா டிக்கெட்டும், இன்னொரு பையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுமே மிஞ்சி இருந்தன. பெரிய ஆறுமுகம் குத்தலாக உபதேசித்தார். -

துரை கையில செக்குதான் இருக்கும். அத இப்போது மாத்த முடியாது. ஏளா. க ன கா. ஒங்கிட்ட இருந்தாக் கொடு,’’

கனகா, அப்போதுதான் பீடிக்கடையிலிருந்து கூலியாக வாங்கி வந்த்ருந்த பணத்தில் சில்லறை நோட்டுக்களைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு முழு நூறு ரூபாய் நோட்டை அண்ணனிடம் நீட்டினாள். பெரிய ஆறுமுகம், கோதி முடித்த கொண்டையைத் தடவி விட்டுக்கொண்டே, வெளியில என் சைக்கிள் இருக்கு. எடுத்துட்டுப் போயி ஜல்தியா வாடா என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/45&oldid=600503" இலிருந்து மீள்விக்கப்பட்டது