பக்கம்:பூநாகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 37

அசல் அக்கினிநாத் போல் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு, அதன் மேல் தலையைக் கவிழ்த்துப் போட்டு நின்று கொண்டிருந்த, கலைச்செல்வன் முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந் தான். அப்போது வீட்டுக்குள் அழுகைச் சப்தம் பலத்தது. உள்ளே போகப் போனவன், மன சை அக்கினிநாத் மாதிரி வைத்துக் கொண் டு சைக்கிளை எடுத்தான். விடுத்தான்.

永 求 掌

தெருவில் பம்பரமாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், அலறியடித்து ஓடும்படியும், மண் குடத்தில் தண்ணி ஏந்தி வந்த ஒரு பரமசாதுப் பெண் , தான் தப்பிக்க குடத்தைக் கீழே போடும்படியும், கலைச்செல்வன் சைக்கிளை வேக வேகமாய் ஒட்டினான். அண்ணன் அக்கினிநாத் ஒரு படத் தில் இதே மாதிரியான கிளை மாக்ஸ் காட்சியில், எப்படி மோட்டார் பைக்கில் பாய்ந்தானோ, அதே போல் அந்தச் சைக்கிளையே ஒரு மோட்டார் பைக் ஆக்கினான். அது கீழே விழுந்து அவனைப் புறமுதுகு காட்டும்படி தட்டிவிட் டது. மீண்டும் அவன் சைக்கிளில் ஏறி, 'தந்தையைப் போல் ஒரு தெய்வமுண்டோ’’ என்று அக்கினிநாத் பாடிய பாடலை மனசுக்குள்ளேயே ஒலிக்க வைத்துக்கொண்டு, கோணச் சத்திரத்திற்கு வந்துவிட்டான். சைக்கிளை உருட் டிக்கொண்டே வெள்ளை வண்ணத்தில் முண்டியடித்து நின்ற வாடகைக் கார்கள் பக்கம் நெருங்கினான்.

அங்கு என்ன கூட்டம்? தெரிந்த மொகங்களா தெரியுது? அது என்ன லாரி? ஒரே தலை மயம். கலைச்செல்வன் சைக்கிளை உருட்டிக்கொண்டே போனான்.

அங்கு லாரியில் இடுப்பளவு சுற்றுப் பலகைக்கு உள்ளே நாற்பது தலைகள் நெருக்கியடித்து நின்றன. அத்தனையும் விடலைத் தலைகள். சிலர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் . பலர் மெளனமாய்க் கண்களைத் துடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/46&oldid=600504" இலிருந்து மீள்விக்கப்பட்டது