பக்கம்:பூநாகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 39

அது கண்ணில் படவில்லை. கீழே குனிந்து நான்கைந்து கற்களைப் பொறுக்கிக் கொண்டு அங்குமிங்குமாக ஓடியோடி எறிந்தான். பல கார்கள் ரிவர்சில் போயின. அப்படியும் திருப்திப்படாமல் ஐந்தாறு கடைகளை நோக்கிக் கல்லெறிந் தான். லாரியிலிருந்தும் சில பையன்கள் குதித்தார்கள். ஒரே கல்லெறி, சோடா பாட்டில்கள், மெட்ராஸ் ஸ்டைலில் எறியப் படாமல் கிராமத்துப் பாணியில் எறியப்பட்டன. இதனால் கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து ஸ்தம் பித்தது. மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.

கண்ணகி மதுரையை எரித்துத் திருப்திப்பட்டது போல், கல்லெறிந்து திருப்திப்பட்ட கலைச் செல்வன், லாரியின் பின் பக்கமாக வந்தான். அங்கினிநாத் அக்கினிநாத்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினான். உடனே லாரியில் நின்ற விடலைகள் வாழ்க வாழ்க’ என்று கோஷமிட்டார் கள். கீழே நின்ற லாரியின் பலகையில் முகம் போட்டுக் களைப்பாறிய கலைச்செல்வனை, கழுத்தைப் பிடித்து லாரிக்குக் கொண்டு வந்தார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவரும் நடிகர் அக் கினிநாத்தின் கல்யாண குணங்களைத் தங்கள் தரத்திற் கேற்றவாறு விளக்கிக் கொண்டிருந்ததைக் கலைச்செல்வன் உன்னிப்பாகக் கேட்டதால், லாரி ஒடுகிற உணர்வே அவ னுக்கு வரவில்லை. ஒரே ஒருமுறை அப்பாவை நினைத்துப் பார்த்தான். அதற்குள் லாரி ஐம்பது கிலோ மீட்டரைத் தாண்டிவிட்டது.

$3. §3. §3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/48&oldid=600506" இலிருந்து மீள்விக்கப்பட்டது