பக்கம்:பூநாகம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னாடை

வாழ்ந்து கெட்ட வயதான நீராமர் போல், அந்த பிர மாண்டமான பங்களாவை, பிரமிப்பு ஏதுமின்றி ஏறிட்டுப் பார்த்தார் கந்தய்யா.

வில்மாதிரி வளைந்திருந்த தளை நார், வலது தோளுக்கு வளையமாகி, இடுப்பைத் தொட்டது தென்னைம்பாளை யால் கட்டப்பட்ட கூம்புப் பெட்டி, இடது தோளில் அம்ப ராத் துணிப்போல தொங்கியது. இநத பாளைச் சதையை' இழுத்துப் பிடிப்பது மாதிரியான மூங்கில் எலும்புகள், இரண் டையும் இழுத்துக் கட்டிய பனைநார் நரம்புகள். இடுப்பில் ஒரு பாட எதி பெல்ட். முட்டியோடு முடிந்து போன தார்ப் பாய்த்த வேட்டி. கை முட்டிகளிலும், கனுக்கால்களிலும் கருந்திரட்சையான கா ய் ப் பு க ள். கொட்டாங்குச்சியை வாயளவு இடைவெளியில் வளைத்துப் பிடித்து வைத்திருப் பது மாதிரியான மோவாய். நீராமர் வனவாசம் செய்த போது வந்திருக்கக்கூடிய சிண்டு சிடுக்குமான முடி எலும் போடு ஒட்டிய உடம்பு ஏறிட்டுப் பார்த்தால்தான் முகம் தெரியும் என்கிற மாதிரியான உயரம். நாற்பதுக்கு மேலே நாற்பத்தைந்துக்கு கீழே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/49&oldid=600507" இலிருந்து மீள்விக்கப்பட்டது