பக்கம்:பூநாகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 43

டாள். முன்சாமி கந்தய்யாவை புல்வெளிகளுக்கு மத்தியில் வளைந்து நெளிந்து போன மெட்டல் பாதையில் நடக்க வைத்தான். முன்னால் நடந்து நடந்து பின்னால் நடந்த வரை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

அந்தப் பங்களாவின் பின்பக்கம் வந்த கந்தய்யா, தற் செயலாய் நிமிர்ந்தார். அங்குள்ள குட்டி தென்னைத் தோப் பைப் பார்த்து, உடம்பை நிமிர்த்தினார். வளைத்து வைத்த கால்கள் நிமிர்ந்தன. கழுத்தை மறைத்து தொங்கிய முகம் இப்போது உயரமானது. பெரிய பெரிய தேங்காய்களை சுமந்த அதிகமான தென்னைகளையும், பச்சையும் சிகப் பும் கலந்து மின்னும் பெங்களுர் குட்டை தென்னைகளையும், கோணல் மான லான நக்குவாரி தெங்குகளையும், அவர் உற்று உற்றுப் பார்த்தார். மயில்கள் விசுவருபம் எடுத்து ஆடுவதுபோல் தோன்றிய அத்தனை தென்னைகளையும், பார்க்கப்பார்க்க, அவருள் ஏதோ ஒன்று விஸ்வரூபம் ஆனது. தென்னை மரங்களைவிட தானே அதிகப் பச்சை என்பது போல் பப்பாளி காய்களை சிலுக்கி மினுக்கி குலுக்கி காட்டும் பப்பாளி மரங்களை அலட்சியமாகப் பார்த்தார். ஒரு தென் னையின் துரில் வேரூன்றி அதன் மேல் பாம்பு போல் சுற்றிய பசலைக்கொடியை உதாசீனமாகப் பார்த்தார். ஒரு தென்னையை உயர விடுவது இல்லை என்பது போல் மேலே குடை போல் விரிந்த மாமரத்தை சினந்து பார்த்தார். காய்க் காமல் கருகி தலைகீழாக தொங்கிய பாளைகளையும், பழுப்பு ஒலைகளையும் கோபமாக பார்த்தார். அந்த வீட்டுக் காரர்களை திட்ட வேண்டுமென்பது போல் கூட அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இப்படியா-மரங்களை - அம் போன் னு விட்றது.

தென்னைகளோடு தென்னையாகிப் போனவர், அந்த அம்மா, தனது சோடியோடு அங்கே நிற்பதை கண்டுக்காமல் நிற்பதை கண்டு கொண்ட முனுசாமி, கந்தய்யாவின் தோளை தடவினான். தட்டினான் பிறகு அடித்தான். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/52&oldid=600510" இலிருந்து மீள்விக்கப்பட்டது