பக்கம்:பூநாகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45

வோம். ரேட்ட வேணுமின்னா ஐந்து இருந்து ஆறாக கேட் போம்.

கந்தய்யா உதடுகளை சரியாக திறக்காமலே ஏதோ உச்சரித்தார். அது அந்த அம்மாவுக்கு புரியவில்லை.

'இந்தாப்பா-முன்சாமி. இவன் என்ன சொல்றான் கேளு.’’

  • பதினைந்து மரத்துக்கு மட்டும் போதுமாம்மா..??

கந்தய்யா தோளில் தொங்கிய பாளை அரிவாளை கை யில் எடுத்தபடியே முனுசாமியிடம் மேலும் ஏதோ பேச, முனுசாமியும் அந்த உச்சரிப்பை அந்த அம்மாளிடம் அர்த்தப் படுத்தி பேசினான்.

  • ஒரு மரத்துக்கு எவ்வளவு ரேட்டுன்னு கேட்கா ரும்மா...??

'என்னப்பா இது, ஒரு தொழிலாளி வயத்திலே அடிப்

பவளா நான்?

நீயே சொல்லக்கூடாதா?’’ நல்ல வேளை வயிறுன்ன தும் ஞாபகம் வநதுட்டுது. பாவம் இந்த மரமேறி வயிற்றைப் பாரு. எம்ட்டி கிண்ணம மாதிரி தோணுது. ஏய் இந்தாடி சுதாமா. கொஞ்சம் பழைய சாதம், நார்த்தங்காய் ஊறு காய் எடுத்துட்டு வாடி. உன் பேரு என்னப்பா.’’

கந்தய்யா??

முதல்லே சாப்பிடு கந்தப்பா. உன் காசை பிடித்து தானா நான் கோட்டை கட்டப்போறேன். ஏய சுதாமா.

ஒன் னைத்தாண்டி..??

சுதாமா ஒரு ஈயப் பாத்திரத்துடன் வெளிப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/54&oldid=600512" இலிருந்து மீள்விக்கப்பட்டது