பக்கம்:பூநாகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பன்னாடை

இந்த பதினாறு வயசுப் பெண்ணுக்கு அம்மா இட்ட பெயர் லட்சுமி. ஆனால் இவள் டிவி மகாபாரதத்தில் பால கிருஷ்ணனின் தோழனாக வருவானே சுதாமா. அவனை மாதிரியே குதிரை வால் முடி காட்டி தோன்றுபவள். ஆகை யால் எசமானி அம்மாளின் பெயர், பெத்த அம்மாவின் பெயரை துரத்திவிட்டது. என்றாலும் இப்போது முனுசாமி முன்னால் அப்படிப்பட்ட பெயரை வாங்கிக்கொள்ள அவ ளுக்கு இஷ்டம் இல்லை. ஆகையால் வீட்டுக்காரியை வாய்க்குள் பூசணிக்காய் பொந்தி’’ என்று திட்டிக் கொண்டே ஈயப்பாத்திரத்தை கந்தய்யாவிடம் சந்தோஷத் துடன் நீட்டினாள். பஞ்சு மாதிரி திரண்ட கஞ்சியில் நூல் நூற்கலாம். அப்படிப்பட்டதை, சாப்பிட்டதாக பேர் பண்ணி, அம்மாவுக்கு தெரியாமல் குப்பைத் தொட்டியில் ஊற்ற நினைத்த சுதாமா; இப்போது கந்தய்யாவை ஒருவாய் உள்ள குப்பை தொட்டியாக நினைத்தாள். அவர் இரண் டு கையையும் திருவோடு மாதிரி ஆக்கியபோது அவள் ஈயப் பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தாள். கந்தய்யா நாலே மடக்கில் கஞ்சியை காலி செய்துவிட்டார்.

இந்த மரமேறி மனிதர் வயிறு காட்டிய குளிர்ச்சியை அந்த அம்மாளின் மீது ஒரு பார்வையாக்கினார். முன் கூட்டியே ரேட் பேச வேண்டும் என்ற எண்ணத்தை செஞ்சோற்றுக் கடனுக்கு எதிரான செயலாக நினைத்து அந்த அம்மாவின் கண் முன்னாலேயே ஒரு அந்தமான் தென்னை மீது உடம்பை போட்டார். நாகர மாட்டிக் கொண்டு, ஒரு கையை தென்னையின் முதுகை வளைத்து, மறுகையை, அதன் மார்பில் ஊன்றியபடியே அனாசியமாக தாவினார். இடையில் இன்னொரு தென்னையில் இருந்து வழி மறத்த ஒலைக்கையை ஒரே சுண்டால் சுண்டி அதை கீழே சாய்த்தபடியே அந்தக் கோணைத் தென்னையில் தத்தித் தத்தி, தாவித் தாவி, குதித்துக் குதித்து படுத்துப் படுத்து மேலே போனார். உச்சிக்குப் போய் ஒரு நோட்டம் போட்டார். எம்மா பெரிய பன்னாடைங்கோ. நயினா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/55&oldid=600513" இலிருந்து மீள்விக்கப்பட்டது