பக்கம்:பூநாகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 47

நல்லாத்தான் சொன்னார். அடே. கந்தய்யா தென்னை மரத்து சில்லாடைங்க தேங்காய்களுக்கு, குழந்தைகளுக்கு, தொட்டில் மாதிரிடா. ஆனா அதே தொட்டில் சேலை பின்னிக்கிட்டா குழந்தைக்கு மூச்சு முட்டி அதுவே பாடை யாகி விடும். அதனாலே இந்த பன்னாடைங்களை பக்குவமா எடுடா என்று அந்தக் காலத்திலே கூத்துப் போட்ட அப்பாக் காரர் சொல்லுவார். இவரைக் கூட, கூத்தில் திரெளபதி வேடம் போட கூப்பிட்டார்கள். இவருக்குத்தான் பிடிக்க வில்லை. சேலை கட்டி, அப்புறம் அதையும் அவிழ்க்க விட்டு... சீச்சி...

கந்தய்யா, சிந்தனையிலிருந்து விடுபட்டு, பட்டுப்போயி ருந்த ஒலைகளை பிய்த்து எறிந்தார். தென்னங்குறும்பல் களை, முட்டைகளை அடை காக்கும் கோழி போல் அடை காத்த ஒரு பாளையைச் சுற்றிய பன்னாடைகளை குறும்பல் கள் தெரியும்படி பக்குவமாக அகற்றினார். அடி உச்சியில் கோணல் மாணலாய்க் கிடந்த சில்லாடைகளை அரிவாளால் கூறு போட்டு அப்புறப்படுத்தினார். அனாவசியமாக தோன்றிய பச்சை ஒலைகளின் அடிவாரங்களை பாளை அரிவாளால் கோடு போட்டார். அந்த ஒலைகள் அடியற்று வீழ்ந்தன. அதன் அடிவாரங்கள் இப்போது ஜோதி போல் மின்னின. பன்னாடை போன பாளைப் பூக்கள், தங்கச் சரட்டில் தொங்கும் முத்துக்கள் மாதிரி மின்னின. இப்போது அந்த மரமே கிராப்பு வெட்டப்பட்ட மனிதர்கள் போல் நவீனப்பட்டது. நீண்ட நாளைய தாடி எடுததால் முகம் எப்படி மின்னுமோ அது போல், அதன் தேங்காய்களும் உச்சியும், ஒரு சேர மின்னின.

கால் மணி நேரத்தில் கந்தய்யா கீழே இறங்கினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த, அந்த அமமாவை பார்க்காமல், இன்னொரு மரத்தல் ஏறப் போனார். அந்த அம்மாவும், அவருடன் வேலை வாங்குவதற்கு நிற்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/56&oldid=600514" இலிருந்து மீள்விக்கப்பட்டது