பக்கம்:பூநாகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பன்னாடை

வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் போய் விட்டாள்.

கந்தய்யா, மரம் மரமாய் தாவினார். ஒரு சில மரங்களில் முற்றிப் போன தேங்காய்களை கீழே வீழ்த்தினார். வருத்தப் பட்டு பாரம் சுமக்கும் பட்டுப் போன பாளைகளையும், குறும்பல்களையும் கீழே தள்ளினார். நான்கு மரங்களில் ஏறி முடித்துவிட்டு ஐந்தாவது மரத்தை அவர் பார்த்தபோது அந்த அம்மா மீண்டும் அங்கே வந்தாள். இப்பொழுது அவள் கையில் ஒரு குவளை டம்ளர். அதன் கொள்ளளவு முழுவதும் நெய் மணக்காத மோர்.

கைந்தய்யா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. இந்த மரங்க எல்லாம எங்கே போகப்போகுதுப்பா... முதல்லே மோர் சாப்பிடு.’’

கந்தய்யா, அந்த மோர் டம்ளரை ஒரே மடக்கில் காலி செய்தார். அந்த அம்மாவுக்கு மரியாதை கொடுக்கும் வகை யில், தண்ணிர் தொட்டிக்கு அருகே போடப்பட்ட கல்லில் உட்கார்ந்தார். அந்த அம்மா, போன உடனேயே எழுந்தார். பெல்லட்டை இறுக்கிப் போட்டார். அடுத்த தென்னைக்கு தாவினார். ஏதோ ஒரு தென்னையில் மட்டும் அவர் பாளை அரிவாள படவில்லை. இவ்வள வுக்கும் அந்த மரம் ஜடாமுனியாகவே இருந்தது. ஆனாலும் தேங்காய்களுக்கு தேவையில்லாத சில்லாடைகளை ஆதர வாக ைவத்து ஒரு குரு விக்கூடு இருந்தது. அதற்குள் இரண்டு குருவிகள் வாய்களை தீப்பந்தங்களாக காட்டின. அவருக்கு அந்த கூட்டை சிதைக்க மனம் வரவில்லை. அப்படியே இறங்கி விட்டார். மற்றபடி அத்தனை மரங்களையும் சீராக்கி விட்டார். பழுப்பேறியவை பளபளத்தன. வெள்ளை யும் தொள்ளையுமாய் மின்னின.

கந்தய்யா வேலை முடித்த களைப்பில்-அதுவே ஒரு திருப்தியைக் கொடுக்க தேங்காய்களை பொறுக்கிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/57&oldid=600515" இலிருந்து மீள்விக்கப்பட்டது