பக்கம்:பூநாகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பன்னாடை

சுதாமா, கையில் திணித்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை கந்தய்யா நம்ப முடியாமல் பார்த்தார். ஒரு வேளை, ஆறேழு ஐந்து நோட்டுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்குமோ என்று அந்த நோட்டுகளை பிதுக்கினார். அவை கிழியப் போவது போல் தோன்றின. அவர் அந்த அம்மாவை லேசான ஆத்திரத்தோடு பார்த்தார். அவளோ இப்பொழுது மங்களகரமாக சிரித்தபடியே சொன்னாள்.

'உன் பிள்ளைகளுக்கு ஒரு தேங்காய் வேண்டுமானால் எடுத்துட்டுப் போ. சமையலுக்கு ஆவும். உன் சம்சாரம் சந்தோஷப்படுவாள்.’’

சம்சாரத்தை நினைத்தவுடனே, அவள் காடா துணி இல்லாமல் வரும் தன்னைப் பார்த்து கத்தப்போகிறாள் என்ற பயம் கந்தய்யாவை பற்றிக் கொண்டது. இதயத்தில் கோபம் ஊற்று எடுத்தது. அதில் கொதித்தெழுந்த லார்த்தைகளை வயிற்றில் இருந்த பழைய சாதம் இழுத்துப் பிடித்தது. அப்படியும் மேலே போன, ஒரு சில வார்த்தைகளை, தொண்டைக்குள் இருக்கும் பக்கடா கீழே தள்ளியது. இதை மீறி வாய்க்கு வந்த வார்த்தைகளை அந்த அம்மாவின் கருணையான பார்வையும், தாய்மையான தோரணையும் ஆவி ஆக்கின. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ் ஜீப் வேணக்கம் அம்மா, அய்யா இருக்காங்களா...?’ என்ற குரல் காரர்களோடு உள்ளே வர, அந்த அம்மா சிம்மாசனத் திண்ணையில் நின்றபடியே அவர்களை ஆசீர்வதித்தாள். பிறகு, வீட்டுக்குள் அலட்சியமாகப் போய் விட்டாள்.

வேலைக்கார இளைஞன் முனுசாமி, உதடுகளைக் கடித்துக் கொண்டான். இவன், அந்த அய்யா வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேஷவல் அதாவது அன்றாட கூலி. இந்த வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டே அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு ரிஜிஸ்டர். ஆபிஸ் வேலையில் நிரந்தரமாக வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/59&oldid=600517" இலிருந்து மீள்விக்கப்பட்டது