பக்கம்:பூநாகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53

அப்படியும் நான் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு, தன் முந்தானையால் என் முகத்தைத் துடைத்து விடுவாள். அம்மா சொல்லித்தான் பொழுது விடிந்தது எனக்குத் தெரி யும், ஆனாலும், சின்ன வயசிலேயே நிரந்தரத் தூக்கமான என் அம்மாவை நினைக்கும்போதெல்லாம், இடம் தெரியாத ஒரு இடத்திலிருந்து, உருத் தெரியாத ஒரு சுகச் சோகமான தென்றல் முகத்தை வருடிக் கொடுக்கிறது கண்களை ஈரப் படுத்துகிறது. இதை ஒரு தடவை என்னுடைய சைக்யாட் ரிஸ்ட் மைத்துனனிடம் விளையாட்டாகச் சொன்னபோது அவனோ, அம்மாவின் பிரிவு உங்கள் அடி மனதில் தேங்கி உங்களுக்கு ஃபீலிங்க் ஆப் இன்செக்கூரிட்டி-அதாவது பயப்பிரமையை எற்படுத்தியிருக்கிறது?’ என்றான். நான் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவனை பயமுறுத்து வது போல் பார்ப்பேன். பக்கத்தில் நின்ற மனைவிகூட ‘இவரா பயப்படுறவரு?... நம்ம பயமுறுத்தாம இருந்தா சரி தான்’ என்றாள்.

இந்த கடந்தகால நினைப்போடு நின்ற எனக்கு, தலை தரையில் விழுவது போல் துடித்தது. தூங்க வேண்டுமென்று உடல் தன்னை வளைத்துக் கொண்டது. ஆனால், உள் ளமோ தூங்கக்கூடாது என்று என்னுள்ளே சொல்லிச் சொல்லி உடம்பை நிமிர்த்தியது.

படுத்த உடனே தூங்கக்கூடியவன் நான். என் மனைவி கூட ராமாயணத்துல ராமபிரான் வில்ல ஒடிச்சது தான் தெரியும். எடுத்தது தெரியாதுன்’னு கம்பன் சொன்னது மாதிரி நீங்க தூங்கறதுதான் தெரியுது. படுக்கையிலே விழு கறது தெரியல. என்ன ஜென்மமோ என்பாள். நான் தூக்கத்தில் புரள்வதை தப்பாக நினைத்துக்கொண்டு, 'நான் ஒண்னும் அந்த அர்த்தத்துல சொல்லலே’ என்று தோளில் கையைப் போட்டுக்கொண்டு சொல்வது லேசாய் ஒலிக்கும். ஆனாலும் இந்த தூக்க சுகத்தைவிட, அந்த 'சுகம்’ எனக்கு பெரிதாய் பட்டதில்லை. அதை ஈடுகட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/62&oldid=600520" இலிருந்து மீள்விக்கப்பட்டது