பக்கம்:பூநாகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

விரிவான பரிணாமம் சமூகப் பிரக்ஞை என் பார்கள்.

இந்த இரண்டு பண்புகளும், சொல் லோடு செயலோடு ஒடும் இரத்தத்தில் ஒவ் வொரு செல்லோடும் இலட்சிய பூர்வ மாக கலந்துவிட்ட காட்சியைத்தான் எழுத்தாள நண்பர் திரு. சு. சமுத்திரம் அவர்களிடத்தில் அவருடைய மாணவப் பருவத்திலிருந்தே நான் கண்டு வியந்த பெருமைப்பட்ட அருங்குணமாகும்.

அமெரிக்கப் பெரும் கவிஞன் வால்ட் விட்மேன் ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்: இ ைத (அவருடைய புத்தகத்தை) தொடுபவன் ஒரு மனிதனைத் தொடு கிறான்?’ எ ன் ப ைத உணரட்டும்.** Any one who touches this touches a Man ??

திரு. சமுத்திரம் அவர்களுடைய உயிரோட்டமான படைப்புகள் எதுவாக இருந்தாலும் என்னுள் இயல்பாக எழு கின்ற உணர்வு இதுதான், மனிதனை பல கோணங்களில் பார்க்கிறார். அவனைப் பற்றி பீடித்திருக்கின்ற அழுக்கு இழுக்கு அவ மரியாதைகளை துடைத்தெறிய சிறு கதை இலக்கியத்தை ஒரு போர்க் கருவி 蛾J肪5 உபயோகிக்கிறார். அவனோடு சேர்ந்து அவனுடைய குற்றமற்ற மகிழ்ச்சி யில் திளைக்கிறார் சிரிக்கிறார். அவ னோடு சேர்ந்து அழுகிறார். தன்னையே வறுத்திவதைத்துக் கொள்கிறார்-அவரு டைய எழுத்துக்களை உணர்வு பூர்வமாக படித்தவர்கள் இதை உணர்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/7&oldid=600463" இலிருந்து மீள்விக்கப்பட்டது