பக்கம்:பூநாகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பனிப் போர்

சிந்தாதிரிப்பேட்டை ஆறுமுகம், நான் கடவுள், நான் கடவுள்' என்று பைத்தியத்தில் புலம்பியது மாதிரி புலம்பு கிறேனோ? நான் பைத்தியமோ? அதனால்தான் மனைவி இப்படி அழுகிறாளோ? இல்லை .. ஆமாம். அவள் அஞ்ஞானி. அப்படித்தான் அழுவாள். நான் பைத்தியம் என்றுதான் நினைப்பாள். ஆனால் நானோ - ஞானி. புத்தனாய் ஆனவன். ரமணரிஷியாய் போனவன். ரமணரைக் கூட பைத்தியம் என்று ஆரம்ப காலத்தில் அவர் மீது சிறுவர்கள் கல்லெறிந்தார்களாமே? சேஷாத்திரி சுவாமிகளைக் கூட பைத்தியம் என்று போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தார் களாமே? அவர்களைப் போலத்தான் நானும். நான் பைத்திய மில்லை. ஞானி. ஞான வான். அது சரி, ஞானத்திற்கும் - தூக்கமின் மைக்கும் என்ன சம்பந்தம்? தட்சிணாமூர்த்தி கூட கண்ணை மூடிக் கொண்டு தானே இருக்கிறார்? அனந்த சயனம் கூட பாற்கடலில் அரிதுயில் கொள்கிறானே. நான் ஏன் தூங்கக் கூடாது? துாங்கக் கூடாது என்று ஏன் அப்படி ஒரு எண்ணம்? ஞானத்திற்கும், தூக்கமினமைக்கும் எனன சம்பந்தம்? ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? இல்லை. ஞானம் என்னைப் பற்றிக் கொண்டது. ஞானமா? பைத்தியமா?. பைத்தியத்தின் முற்றலா? அல்லது ஞானத்தின் துவக்கமா?

மனைவியின் அழுகைச் சப்தம் என்னை நிமிர்த்துகிறது. அந்த அறை வாசலுக்குள் மாயமாய் மறைந்து போன, டாக்டர் இப்போது ஊசி மருந்தோடு வருகிறார். நடந்ததைக் கேள்விப்பட்டோ என்னமோ, அந்த குடிசை சாமியாரும், விபூதிப்பையோடு வருகிறார். இருவரும் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பனிபபோரில் யாருக்கு வெற்றி என்று பார்ப்போம்.

\{ ४{ §3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/71&oldid=600529" இலிருந்து மீள்விக்கப்பட்டது