பக்கம்:பூநாகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு குடியின் வரலாறு

அந்த மோட்டார் பைக்கிலிருந்து இடது பக்கமாக சரிந்து சரிந்து கீழே விழாமல் தொற்றிக் கொண்டிருப்பவர் போல் அந்த வாகனத்தைத் திருப்பாமல் தன்னைத் திருப்பிக் கொண்டிருந்த ராமசாமி தனது வீடு உள்ள தெருவில் மாடி பால்கனியில் மனைவியைப் பார்த்ததும், மேல் அதிகாரியை பார்த்தால் எப்படி நிமிருவாரோ அப்படி நிமிர்ந்தார். வழக்கம் போல் இன்று காலையில் கூட ‘ஹாண்டில லேசா திருப்பினா வண்டி தானா திரும்பிட்டுப் போகுது. நீங்க எதுக்காக தலைகீழா தொங்குறீங்க -லூ ஸ்சு-லூ ஸ்சு’’ என்று மட்டும் அந்தம்மா சொல்லவில்லை, தென்னை மரத்தில இருக்கிற ஓணான் காத்துல மரம் ஆடும் போது அந்த மரத்தை தான் ஆட்டுறதா நினைச் சு தலைய ஆட்டுமாம். நீங்க என்னடான்னா உடம்ப முழுசும் இல்ல ஆட்டுறீங்க’’ என்று உதாரணத்தோடு அந்தம்மா, பேச்சை முடித்தாளா என்றால் அதுதான் இல்லை. 'எதுக்கும் பரம் பரை பரம்பரையா சின்ன வயசிலயிருந்தே ஒட்டியிருந்தாத் தானே பழக்கம் வரும்’ என்றும் சொல்லி வைத்தாள். இது வரை எந்த வாகனத்தையும் வாங்காமல், அவளையும் பின் னால் தூக்கிக்கொண்டு போகாமல், இந்த ஐம்பது வயதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/72&oldid=600530" இலிருந்து மீள்விக்கப்பட்டது