பக்கம்:பூநாகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒரு குடியின் வரலாறு

அவள் உட்கார முடியாதபடி குலுக்கி எடுக்கும் ஒரு பைக்கை வாங்கியதை விவகாரமாக்கிக் கொண்டிருக்கிறாள். ஆகை யால் இந்த ராமசாமிக்கும் பைக்கைத் திருப்பும்போதெல்லாம் மனைவியின் ஞாபகய வரும். போதாக்குறைக்கு ஒரு ஓணான் வேறு பூவரச மரத்திலிருந்து தலையை ஆட்டும்.

ராமசாமி தலையை 90 டிகிரியிலும், முதுகெலும்பை நேர்கோடாகவும், வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டே ஓடுகிறவர் போல் பைக்கை ஓடவிட்டபோது, அந்தம்மா மாடிப்படிகளில் அவசர அவசரமாய் இறங்கி கேட் டைத் திறந்து கொண்டிருந்தாள். அவர் ஆச்சரியப்ப டு - அதைக் காட்டும் வகையில், பைக்கிற்கு சடன் பிரேக் வேறு போட்டு விட்டார். மோட்டார் ைபக்கை உருமவிட்டுக் கொண்டு பால்கனியில் இருக்கும் மனைவியைப் பார்த்து கொஞ்சம் கேட்டைத் திற, கேட்டைத் திற’’ என்று அவர் பலதடவை சொன்னாலும், அந்தம்மா ஒரு தடவை கூட திறந்ததில்லை. பேசாம திறந்துக்கிட்டு வாங்க’ என்பாள். அந்தப் பயல்களாவது கேட்டைத் திறப்பார்களா..? என்றால் அம்மாவின் பேச்சை கைகொட்டி ரசிப்பார்கள். ஆனால், இப்போ என்ன வந்தது, எதற்காக இவள் மோட்டார் பைக் வேகத்திற்கு எதிர் முனையிலிருந்து ஓடி வராள்.

ராமசாமி காலை பிரேக்கில் தேய்த்தபோது, அந்தம் மாள் ஒட்டிவந்த கால்களை தரையில் தேய்த்தபடி மூச்சு முட்ட அந்த பைக்கின் முன்னால் நின்றாள். பிறகு வாயையே மூக்காக்கி, மூக்கை வாயாக்கிப் பேசினாள்.

கோபப்படலைன்னா ஒரு விஷயத்தைச் சொல்லு றேன்.

  • விஷயத்துக்கு வா?

அந்த பேதில போவான் . அதான் உங்க மச்சினி புருஷன், சாராயத்தை குடிச்சிட்டு வீட்டுக்கார அம்மாவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/73&oldid=600531" இலிருந்து மீள்விக்கப்பட்டது