பக்கம்:பூநாகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 65

கண்டபடி திட்டிக்கிட்டு இருக்கானாம். கடைசியில நாய குளிப்பாட்டி நடுவீட்டுல வெச்ச கதையாப்போச்சு. அமுக்கடி கள்ளன், அற்பன், ஒரு வருஷம் வரைக்கும் சும்மாயிருந்த கொள்ளையில-போவான், இன்னிக்கி பார்த்து குடிச்சிருக் கான் பாருங்க. அந்தத் தெருவில இருக்குற ஒருத்தி வந்து இப்போதான். சொல்லிட்டுப் போறாள் - கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறானாம்.??

ராமசாமி மெய்யாகவே அதிர்ந்து போனார். ஆகையால், தான் மச்சினியின் வீட்டுக்காரனை திட்டாமல் இருப்பதற் காகவே தனது வீட்டம்மாள் அவனை அதிகமாகவே திட்டு கிறாள் என்ற சூட்சமம் அவருக்குப் புரியவில்லை. அவளால் சொல்லப்பட்டவன், குடித்துவிட்டு எப்படி ஆடுவான் என் பதை கற்பனை செய்து பார்க்கப் பார்க்க அவருக்கே குடி காரன் போல் கண்கள் சிவந்தன. தலை சுற்றியது. சிறிது நேரம் பேச்சற்று மனைவியைப் பார்த்தவர், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் சாவகாசமாய்ச் சொன்னார்.

'சரி வழிய விடு, எவனும் எக்கேடு கெடட்டும்!...இதுக்கு தான் பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு என்று பழமொழி வந் தது. வழிய விடுடி. கேட்ட பழையபடி மூடு, நானே திறந்து பைக்கத் தள்ளுறேன்.”

இப்போது அந்த அம்மாவுக்கு லேசாய் அழுகை வந்தது. அவரது கடிக்காரக் கையை வருடிவிட்டபடியே பட்டும் படாமல் பேசினாள்.

'பாலைப் பார்க்கிறதா, பால் காய்ச்ச பானையை பார்க் கிறதா...? உங்களுக்கே தெரியும்; நமக்கு கல்யாணம் ஆன. புதுசுல நம்ம பெரியவனை எடுக்குறதுக்காக பத்து வயச லேயே படிப்ப விட்டுட்டு நம்ம கூடவே இருந்தவள் கமல் சுந்தரி. அவள் முகத்துக்காகவாவது -’’

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/74&oldid=600532" இலிருந்து மீள்விக்கப்பட்டது