பக்கம்:பூநாகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒரு குடியின் வரலாறு

அந்தப் பய எக்கேடும் கெட்டுப் போகட்டும், ஒரு வருஷமா விட்டதெ இப்போ ருசி கண்டுட்டான் . இனிமே வட்டியும் முதலுமா குடிப்பான். நாளைக்கே அவன் கடை யையும், டெலிபோனையும் இழுத்து மூடுறேன் பார்.’

வேறு சமயமாக இருந்தால், அந்தம்மா அவரை நாரு நாராகக் கிழித்திருப்பாள், இன்றைக்குப் பார்த்து அவர் காட்டில் மழை. ஆகையால், அவள் கண்களிலும் மழை. ஒரு கன்னத்தில் பொங்கி வந்த நீரை துடைத்துவிட்டு, மறு கன்னத்தில் அதையே அருவியாய் ஒடவிட்டபடி அவரையே பார்த்தாள். அவர் ஒரு கமென்ட் அடித்தார்.

‘தங்கைக்காக ஒரு கண் அழுவுது, மச்சினனுக்காக மறு கண் கொதிக்குதோ...??

"அப்புறம் என்னை நீங்க என்ன வேணும்னாலும் திட்டிக்க லாம், நான் (இன்னிக்கி மட்டும்) பதிலுக்கு திட்ட மாட்டேன் அந்த பேயன யாராவது போலீசுல ஒப்படைக்குறதுக்கு முன்னால சீக்கிரம போங்க!”

சேரி . நீயும் suf ’

'நான் பம்புல தண்ணியடிக்கனும். அப்பத்தான் நீங்க முகம் கழுவ முடியும், ஒங்களுக்குக் காப்பிப் போட முடியும். அதோட நீங்க ஒருத்தக் போதாதா...??

ராமசாமி ம ை வில் ப் - த்தார். உடம்பைப் போலவே தடித்த குரல். மோட்டார் பைக்கின் ஹெட்லைட் போலவே ஏறிட்டுப் பார்ப்பவர்களை கூசவைக்கும் கண்கள். இவள் போனாலே, அவன் பெட்டிப் பாம்பாய் ஆயிடுவான். ஆனாலும், வர மாட்டாள்; அந்தஸ்து பார்ப்பதில் அசல் ராணி. தங்கச்சி வீடு ஒரு குடிசைப் பகுதி என்பதற்காக, ஒரே ஒரு தடவை அதுவும் அவள் குடித்தனம் போகும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/75&oldid=600533" இலிருந்து மீள்விக்கப்பட்டது