பக்கம்:பூநாகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 67

தெருவில் நின்று வீட்டை எட்டிப் பார்த்துவிட்டு வந்தவள் அதே சமயம் அங்கிருப்பவர்கள் யார், எவர் என்று தங்கை யின் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து அவர்கள் சம்பந்தமாக சில அபிப்பிராயங்களை வைத்திருப்பவள சிறிது நேரம் அவளை எடை போட்டுப் பார்த்துவிட்டு பைக கை அங்கேயே நிறுத்திவிட்டு அந்தத் தெருவையும், அடுத்த தெருவையும் இணைக்கும் ஒரு அசிங்கம் பிடித்த பள்ளத்தன் வழியாக நடந்தார். அந்தமமா, கெளரவத்தை மனதில் வைத்து அறிவுறுத்தினாள்.

'பைக்கிலேயே போறது?’

'எனக்கு வார கோபத்துல; இடையில யார் மேலயாவது ஏத்திடுவேன். நடந்தே போய் தொலைக்கிறேன். பைக்கைத் தள்ளி உள்ளே கொண்டு நிறுத்து!’

ஆணையிட்ட கணவனை, அந்தம்மா அசுரத்தனமாய் பார்த்துவிட்டு, அந்த பைக்கை தன் வயிற்றால் இடித்து இடித்து தள்ளிக் கொண்டே போனாள். ராமசாமிக்கு அதை பார்க்க சந்தோஷமாய் இருந்தது. அதே சமயம் அவள் மோதி, அந்த பைக்கு சேதப்பட்டுவிடக் கூடாதே என்ற பயமும் வந்தது. அதுவும், அவளும் கீழே விழப் போவதைப் பார்க்க சகிக்காதவர் போல், மைத்துணி வாழும் தெருவில் விறுவிறுப்பாய் நடந்தார். மைத்துணியின் கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. ஆனாலும், அவன் நல்லவன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. நல்லவன் குடிக்கப்படாதா என்ன? நல்லாவே குடித்தான். கிராமத்தில் பல் தேய்ப்பதி லிருந்து, படுக்கப் போவது வரைக்கும் குடித்தான். ஆனா லும், இந்த ராமசாமி, லீவிலோ அல்லது கேம்ப்பிலோ ஊருக் குப் போகும்போது நாலுநாளைக்கு குடியை விட்டுவிடுவான். சதா லுங்கியையே கொக வட வைத்த புடவை போல் கட்டிக் கொண்டிருப்பவன், வேட்டிக்கு வந்துவிடுவான். இவருக்கு அதில் பெருமை. ஒருதடவை ஒரு லோக்கல் பஞ்சாயத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/76&oldid=600534" இலிருந்து மீள்விக்கப்பட்டது