பக்கம்:பூநாகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஒரு குடியின் வரலாறு

அசாமி நீங்க இருக்கும்போதெல்லாம் குடிக்க மாட்டேங் கிறான். பேசாம மெட்ராஸ்-க்குக் கூட்டிக்கிட்டு போய் ஒரு கடை யோ, கன்னியோ வைத்து கரையேத்தி விடுங்க.’’ என்று சொன்ன வாயோடு வாயாய், ஏய்...தங்கதுரை உங்க ஆபீசரு அண்ணாச்சிய உடும்புப் பிடியா பிடிச்சுகடா என் றார். இவருடைய மனைவியும் நம்மால கமலசுந்தரியோட படிப்புதான் போயிட்டது. அவள் வாழ்க்கையும் போயிடக் கூடாது’ என்றாள் அதட்டலாக.

கமலசுந்தரியும், அவள் கணவனும் கூடவே வந்துவிட் டார்கள். இவரும் வேறு வழியில்லாமல் அவள் புருஷனுக்காக வேலைக்கு அலைந்தார். மைத்துணியும் தனது பிள்ளை களையே சுற்றிச் சுற்றி வந்தாள். துணி தோய்க்க வேண்டுமா...? பம்ப் அடிக்க வேண்டுமா .. ? டி.பன் பாக்ஸ் களை நிரப்ப வேண்டுமா...? அத்தானுக்கும் அக்காளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமா...? எல்லாம் அவளே!

ராமசாமி, தனது செல்வாக்கில், சென்னையிலேயே அவர்களுக்கு ஒரு மளிகைக்கடை ஏற்பாடு செய்து கொடுத் தார். டெலிபோன் டிபார்ட்மென்டில் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு பொதுத் தொலைபேசியையும் வாங்கிக் கொடுத் தார். ரூபாய்க்கு நாற்பது பைசா கமிஷன். ஆக மொத்தம், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல் மாத வருமானம். இப் போது அவர்களே இவர்களுக்கு கைமாத்துக் கொடுப்பது வாடிக்கையாகி விடடது. ஆனாலும், ஒரு சின்ன வருத்தம் அவளுக்கு. இந்த கமலசுந்தரி எதுக்கொடுத்தாலும் எங்க அக்காவால இந்த நிலைக்கு வந்திருக்கோம்’ என்று அவர் கண் படும்படி முகம் காட்டி, காது கிழியும்படி முழங்குவாள். இதனால், ஒருதடவை டெலிபோன் பில் 'கால்-களுக்கு’’ அதிகமாக, கைக்கு வந்தபோது, அவர் கண்டுக்கவில்லை. ஆனாலும், இன்று அவர் மனசு கேட்கவில்லை. அவரால் புத்தாக உருவாக்கப்பட்ட அந்த தங்கதுரை, இப்படி மீண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/77&oldid=600535" இலிருந்து மீள்விக்கப்பட்டது