பக்கம்:பூநாகம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 69

டும் குடிக்க போய் விட்டானே என்கிற ஆதங்கம் ஆத்திர மாகியது.

ராமசாமி மைத்துணியின் வீட்டு வளாகத்திற்குள் துழைந்தபோது, தங்கத்துரை தூள் பரப்பிக் கொண்டிருந் தான். சாராயத்தில் கலப்பதற்காக வாங்கிய சோடாவை கர்லா கட்டை மாதிரி கழற்றியபடியே, 'ஏய்...தடிச்சி, ஏய். கூனி, ஏய். குறுங்கழுத்தி . வாடி... ஒன்ன இ ன் னி க் கி. உண்டு இல்லைன்னு பண்ணுறேன் பார்...” என்று சொன்ன தையே சொல்லிக் கொண்டு முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தான். கமலசுந்தரி, அந்த வளாகத்திற்குள், அவளே பூமத்திய ரேகை மாதிரி ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து கொண்டு, அவன் அந்தக் கோட்டைத் தாண்டி வீட்டுக்கார அம்மாவை சிநருங்கப் போகும்போது பின்னால் தள்ளிவிடுவான் . அவனும், பின்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து கார்ப்பரேஷன் குழாயின் எல்லைச் சுவரில் கால் இடறி, மீண் டும் முன் னுக்கு வருவான். மனைவியைப் போலவே அவ னுக்கும் வாட்டசாட்டமான உடம்பு, மதம் பிடித்த யானை போல் இதுவரை மாவுத்தனம்’ செய்த வீட்டுக்கார அம். மாவை விலாவாரியாக விமர்சித்துக் கொண்டிருந்தான்,

யேய் . ஒன்னால முடியாட்டி ஒன் டப்பா புருஷன வரச் சொல்லுடி. நீயாச்சு, நானாச்சுட ஏண்டி, கிழவி. தெரியாமத்தான் கேக்குறேன்-நீ கக்கூஸ் கதவ பூட்டி வைக் கனும், நாங்க வயிறுவீங்கி சாகனுமா ...? நீபைப்பு குழாய்க்கு ட்டுப் போடனும், நாங்க தாகத்துல துடிக்கனுமா...? அந்தத் த ண் ணி கிடைக்காததுனாலதாண்டி இந்தத் தண் ணி போட்டேன், நாங்க ராத்திரியில சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது நீ லைட்ட ஆ ஃ ப் செய்யனும், எங்க கண்ணு குருடாகனுமா..? வீட்டுக்கு வரவங்கள நீ... நாயே, பேயேன்னு திட்டனும், நாங்க அம்மணம் ஆனது மாதிரி தலை குனியனுமா...? சொல்லுடி. சொல்லுமே. கரன்ட் பில்ல விட இரண்டு மடங்கா நீ காசு வசூலிக்கனும், நாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/78&oldid=600536" இலிருந்து மீள்விக்கப்பட்டது