பக்கம்:பூநாகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒரு குடியின் வரலாறு

கணக்குக்கூட கேட்கப்படாதா, அதான் இனிமே நடக்காது. ஏண்டி கெழவி ஒத்தைக்கு- ஒத்தையா வாறியா, நீயாச்சு, நானாச்சு. ’.

கமலகந்தரி கண்களால் கிழித்த கோட்டைத் தாண்டி அவன் எகிறியபோது அவள் அவனை மல்லாக்க விழத் தட்டி னாள். பிறகு, அவளே அவனை தூக்கிவிட்டு தூசித் தட்டி விட்டாள். மீண்டும் அவன் முன்னுக்கும் , பின்னுக்கும், தள் ளாடித் தள்ளாடி நடை பயின்றான். மழலைத் தமிழும், சென்னைத் தமிழும், நெல்லைத் தமிழும் விரவிக் கலக்க சாராயச் சூட்டோடு சவுக்கடி கொடுத்துக் கொண்டிருந் தான்.

வீட்டுக்கார அம்மா பயந்து விட்டாள் . சற்றே குள்ள மானவள், கர்ப்பிணி பசு மாதிரி முதுகுக்கு அப்பாலும், இப் பாலும் விரிந்த வயிறு. மலைப்பாம்பு மாதிரியான பார்வை, பார்த்தாலே பயங்கொடுக்கும் தோரணைக்காரி. ஆனால், இப்போது அடங்கி ஒடுங்கி மாரியாத்தா. மாரியாத்தா? என்று ஆகாயத்தைப் பார்த்து கும்பிட்டாள். கமலசுந்தரியின் சகக் குடித்தனக்காரிகளான மல்லிகா, கமலா, ஜோதி ஆகிய முப் பெரும் அழகிகளும், சந்தோஷம் தாங்காமல் வாயைப் பொத்தினார்கள். வீட்டுக்காரியின் கணவன், மனைவியை அடக்கவும் ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் குத்து க்கா லிட்டு சும் மாவே உட்கார்ந்துகொண்டு ஒரு டப் பாவை தரையில் தேய்த்துக் கொண்டிருந்தார். கிழவியின் இரண் டு மகள்கள் கமலசுந்தரியின் பக்கம் வந்து ’எக்கா. எ க்கா...' என்று தடுமாறினார்கள்.

தங்கத்துரை எகிறிக்கொண்டே இருந்தான். ராமசாமி - தான் அங்கே நிற்பதை எவரும் பொருட்படுத்தாததினால், ( . பப்பட ப் :ோ.ைார். இறுதியில் ஒரு எச்சரிக்கை விடுத் தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/79&oldid=600537" இலிருந்து மீள்விக்கப்பட்டது