பக்கம்:பூநாகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

மனிதனுக்காக மட்டும்தானா அவர் அழுகிறார், அங்கலாய்க்கிறார்? இந்த கதைத் தொகுப்பில் ஒரு அற்ப காகத்தினு டைய அவல நிலைக்காக அவர் அல்லலுறு வதை முதல் கதையில் இரையும் இறை யும் உணர முடியும். காக்கையின் ஆன் மாவைப் பற்றி இந்த இளம் சித்தர் விளக்கு கிறார்.

மற்ற கதைகளும் இதயத்திற்குக் குளிர்ச்சியும், அறிவிற்குக் கூர்மையும், உணர்வுகளுக்கு உத்வேகத்தையும், பார் வைக்கு தேளிவையும் தெம்பையும் கொடுக்கின்றன.

உளமாற சகோதர பாசத்தோடு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இந்த சங்கநாத எழுத்தாளரை மேன் மேலும் செழித்து கொழித்து சிறப்படைய வேண்டு கிறேன்.

இது நீண்ட நெடிய நட்பின் உந்துதல் அல்ல. உயிரோட்டமான மனிதநேய மிக்க எழுத்துக்களுக்கு தன்னடக்கத்துடன் நான் அர்ப்பணிக்கின்ற காணிக்கை யாகும்.

பகத்சிங் (தேசிய முழக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/8&oldid=600464" இலிருந்து மீள்விக்கப்பட்டது